பெற்றோரின் பெருமை 12

வெளி நாட்டில் பணிப்புரியும் ஒரு அம்மா தன் தாய் நாடு வருகிறார் தன் தந்தையின் உடல் நலக்குறைவின் காரணமாக. பத்து நாட்கள் மட்டுமே விடுமுறை. தன்னுடைய இரண்டு நன்கு வளர்ந்த அதாவது ஒரு குழந்தை கல்லூரியில் படித்து கொண்டிருப்பவர் , அடுத்த குழந்தை பனிரெண்டாம் வகுப்பில் படித்து கொண்டிருக்கும் பிள்ளைகளுடன் மருத்துவமனையில் தன் தந்தையுடன் தங்கியிருக்கிறார். இரவு ஏழு மணி ஆகிவிட்டது அங்குள்ள பணியாளர் நோயாளி இருக்கும் அறைக்குள் வந்து அம்மா ஒருவர் மட்டும் தான் நோயாளியுடன் தங்குவதற்கு அனுமதி என்கிறார். அதைக் கேட்ட அம்மா திடுக்கிட்டார். ஏனென்றால் இன்னும் இரண்டு தினம் தான் இருக்கிறது வெளிநாடு திரும்புவதற்கு இப்போது தன் பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பி விட்டால் தன் மனம் படும்பாட்டை சொல்லி தேற்ற முடியாது என்ற அச்சத்தால் பரபரப்பாக மருத்துவமனையின் வரவேற்பறைக்கு சென்று அங்குள்ளவரிடம் முறையிடுகிறார் அதாவது என்னுடன் இரண்டு குட்டிப்பசங்க இருக்கிறார்கள். இன்று ஒரு நாள் அனுமதி கொடுங்கள் நாளை நாங்கள் டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு சென்று விடுவோம் என்கிறார். இதைக்கேட்டவர் கூறுகிறார். சரிங்கம்மா (ok ) என்று. இதைக்கேட்ட அம்மா மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் தந்தை இருக்கும் அறைக்குள் நுழைகிறார். சிறிது நேரம் கழித்து மறுபடியும் அந்த பணியாளர் சத்தமிடுகிறார் ஏம்மா எத்தனை முறை கூறுகிறேன் ஒருவருக்கு மேல் இங்கு தங்க அனுமதியில்லை என்று. அதற்கந்த அம்மா நான் ஏற்கெனவே வரவேற்பறையில் உள்ளவரிடம் அனுமதி பெற்று கொண்டேன் என கூறுகிறார். இதைக்கேட்ட அந்த பணியாளர் மிகுந்த கோபத்துடன் சென்றவர் அடுத்த பத்து நிமிடத்தில் அனுமதி பெற்றவருடன் அங்கு வருகிறார். அனுமதி கொடுத்தவர் எங்கம்மா உங்க குட்டிப் பசங்க என்று வினவ அந்த அம்மாவோ அவ்விரண்டு வளர்ந்த பிள்ளைகளை கைக்காட்ட அந்த அனுமதியை கொடுத்தவர் கோபத்துடன் நக்கலாக நகைத்துவிட்டு அம்மா. . . மறுபடியும் வெளியில் யாரிடமும் கூறாதீர்கள் இவர்கள் குட்டிப்பசங்களென்று என கூறிவிட்டு நாளைக்கு இப்படி தங்க அனுமதி கிடையாது என்று கூறி நகர்ந்து விட்டார். இதைக்கேட்ட குட்டிப்பசங்க அம்மா. . . ! என்று நகைக்க அம்மாவோ வெகுளித்தனமாக குட்டிப் பசங்களை குட்டிப்பசங்கன்னு தான் சொல்ல முடியும் என்கிறார். தான் பேசுவதின் அர்த்தம் அறியாமலும் சுற்றம் புரியாமலும் அடுத்தவரின் கேளிக்கூற்றினை பொருட்படுத்தாமலும் தன் பிள்ளைகளை வாய்நிறைய மொழிபவள் தான் அம்மா. தன் பிள்ளை உடல் அளவில் வளர்ந்து மன அளவில் மனநிலை குன்றியிருந்தாலும் , புத்தி பேதலித்த நிலையில் இருந்தாலும், தவறு செய்துவிட்டு ஓடி ஒளியும் பிள்ளையாக இருந்தாலும் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த கோபத்துடன் வீட்டிற்கு முன் நின்று “யாரும்மா இந்த பிள்ளையைப் பெற்றவள் ” என்று அழைத்தாலும் என்ன நடந்தது என்றுகூட கேட்காது தன் இரு கைகளையும் கூப்பி மன்னித்து விடுங்கம்மா என் பிள்ளையை என்று அவர்களிடம் மன்றாடிவிட்டு வீட்டிற்குள் வந்தவுடன் தன் பிள்ளையை அனைத்து கண்ணீர் விடுவாள் என் பிள்ளையின் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதால் தானே எல்லோரின் பழிச்சொல்லுக்கும் ஆளாகிறது என்று அப்பிள்ளையின் மீது அன்பை பொழிவாள். அப்பேற்பட்ட தாயானவள் உங்களிடமிருந்து எதிர் பார்ப்பது வானளவு அல்ல நீங்கள் வளர்ந்த அளவுதான் என நான் நினைக்கின்றேன். நீங்கள். . . !

One thought on “பெற்றோரின் பெருமை 12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − five =