சிறு கதை 🙂 சிறு துளி 18

தன்னிறைவுத் தந்தையின்
பொன்னிறைவுக் கட்டளை
பொறுப்பாக படிக்கனும்
கருத்தாக வளரனும் – வாழ்வில்
கருவாகக் கண்டதை முழு
பொருளாக்க முயலனும்.
பொருமையுடன் காக்கனும்
பொக்கிஷத்தை ஆளனும்
பொய்யுரைக்கும் நாவை அடக்கனும் – நல் திறன் காட்ட உழைக்கனும் – அடுத்தவர்க்கு
தீங்கிழைக்க விலகனும் – உனை
குடும்பம் போற்ற வாழனும் – உன்னிடம்
கூடி வாழ்பவரை தேற்றனும்
குனிந்துச் செல்ல மறுக்கனும்
குறைக் கூறா மனதை வளர்க்கனும்
குற்றம் செய்ய மறக்கனும் – என்றும்
குழந்தை மனதாய் நிலைக்கனும்
தர்மத்தைக் காக்கனும் – அதற்கு நீ
தானம் தர்மம் கொடுக்கனும்.
தேடிச் சென்ற உதவியை
நாடிச்சென்று விதைக்கனும்.
கொடுத்தப்பொருளை கேட்கா மனம் இருக்கனும் – தனக்கு
கேட்டுக் கிடைத்த பொருளை
கிடைத்தவுடன் திருப்பிக் கொடுக்கனும்.
தந்தை சொல் மந்திரம் என நினைக்கனும்
தரணி முழுதும் நன்மகனாய் நீ உலா வரணும்.

One thought on “சிறு கதை 🙂 சிறு துளி 18”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + eleven =