சிறு கதை 🙂 சிறு துளி 17

ஓர் தங்கையின் தன்னிறைவு பேட்டி!
அண்ணா என்றழைத்துப்பார்
அன்றலர்ந்த மலரும்
பூஞ்சோலையாய் புன்னகைக்கும்.
அண்ணா அண்ணா என்றழைக்கும் போதே
கணீர் கணீரென்ற உறவு மிளிரும்.
அம்மா என்னை கடிந்த போது
கண்ணே என்று கண்ணத்தில்
முத்தமிட்டது என் அண்ணா.
பொத்தென்று கீழே வீழ்ந்த போது
பொத்தான் கழற்றி புது சட்டைத்துணியால்
துடைத்து விட்டது என் அண்ணா.
நடைப்பழகிய போது
கிட்ட வைத்தக் காலை எட்ட வைக்க
கற்றுக் கொடுத்தது என் அண்ணா.
கெண்டைக்கால் மேலே ஆடை அணிய
மறுத்தது என் அண்ணா.
‘டே’ என்பேன் ‘டா’ என்பேன்
தேவையென்று ஒன்று வந்த போது அண்ணா….. என்பேன்
திகட்டிடுமளவு கண்ணத்தில் குழிவிழ
புன்னகைத்தது என் அண்ணா.
சிக்கன் வேனும் மட்டன் வேனும் என்பேன்
இல்லையென்று கூறிவிட்டு
சிக்கன் பக்கோடா, சிக்கன் 65 யுடன்
சீக்கிரம் வா உண்ணலாம் இல்லையேல்
உனக்கு சிக்காது பழைய குழம்புமென்று அழைத்தது என் அண்ணா.
அன்பைக் கண்டேன் அன்னையிடம்
அரவணைப்பை கண்டேன் தந்தையிடம் –
இவ்விரண்டுடன் இணைந்து பரிவையும் கண்டேன்
என்னிணை அண்ணாவிடம்.

2 thoughts on “சிறு கதை 🙂 சிறு துளி 17”

    1. Union of blood relationship has a strength for that never ever end. thank you for your nice comments.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =