சிறு கதை 🙂 சிறு துளி 14

நம் அனைவரையும் சுற்றியே சந்தோஷங்கள் நிறைந்துள்ளது . ஆனால் அதை அனுபவிக்க தெரியாமல் நாம் தான் சுற்றி அலைகிறோம் வெகு தூரம் என நான் அடிக்கடி கூறுவது போல் தான் நம்முடைய கஷ்டங்களுக்கு மருந்தும் நம்மிடமே உள்ளது. இதை நாம் அறிந்துக்கொள்ளாமல் அடுத்தவரின் மூலமாக ஆறுதலை தேடுகிறோம். அவ்வாறுதல் கிடைக்காத போது மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகி விடுகிறோம். இதற்கு ஒரே ஒரு உதாரணம் கொடுக்க விரும்புகிறேன் ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போல். ஒருவர் அவருடைய கடின உழைப்பால் பொருளாதாரத்திலும், குடும்ப வாழ்வாதாரத்திலும் நல்ல முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருந்தவரின் பாதையில் திடீரென ஒரு சரிவு ஏற்பட்டு ஏமாற்றத்துடன் வீழ்ச்சி காணுகிறார். பொருளாதாரத்தில் வீழ்ச்சியை கண்ட அவர் கலங்கி, மனம் தளர்ந்து, மன அழுத்தத்திற்கு ஆளாகி கடைசியில் மரணித்தும் விடுகிறார். இங்கே மேற்குறிப்பிட்டவரின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் காரணம் யார்?. அவருடைய முன்னேற்றத்திற்கு அவரின் கடின உழைப்பும், அவருடைய பொருளாதார வீழ்ச்சிக்கு அவருடைய முன்னெச்சரிக்கை ஏற்பாடில்லா இயலாமை என்ற மனதின் பொருப்பின்மையே காரணம் என்பதை நாம் முதலில் உணரவேண்டும். மற்றும் அவருடைய பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் காரணமும் அவர் மட்டுமே. ஏனென்றால் அவருடைய மனம் பக்குவமடையா மனம். எங்ஙனம் அவ்வாறு கூறுகிறேன் என்றால் ஒரு தொழிலை ஆரம்பிக்கும் போது இருந்த துணிவு – ன் திடம் ஒரு வேளை தொழிற் சரிவு ஏற்பட்டால் எங்ஙனம் அந்த சூழலை சமாளிப்பது என்ற முன்னேற்பாட்டு திடம் அறியா மனிதர் என்றே கூறுவேன். நாம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கும் போது மற்றவரின் ஆறுதலை நம் மனம் நாடியிருக்காது. அந்த ஆறுதலின் அருமையும் நம் மனம் அறிந்திருக்காது. வீழ்ச்சி அடைந்த பிறகு நம் மனதிற்கு ஆறுதல் தேவைப்படுகிறது ஆனால் அந்த அருமை தெரியா நம் மனதால் அடுத்தவரின் ஆறுதலை ஏற்க மறுக்கிறது அத்துடன் நம் மனமானது தாழ்வு மனப்பான்மை கொண்டு மனத்தளர்ச்சி அடைகிறது என நான் நினைக்கிறேன் – நீங்கள். . . !

2 thoughts on “சிறு கதை 🙂 சிறு துளி 14”

    1. Weakness – some times only make us to feel as a death. But if we have will power we can get up to reach our goal that time this weakness will help as a step ladder. thank you for your suggestion.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 14 =