சிறு கதை 🙂 சிறு துளி 13

பெரியவர், சிறியவர், குழந்தைகள், ஆண், பெண், படித்தவர், படிக்காதவர், பணம் உள்ளவர், பணம் இல்லாதவர், நல்லவர், கெட்டவர், உயர் பதவியில் இருப்பவர், பதவியில் இல்லாதவர், அரசியலில் இருப்பவர், அரசியலில் இல்லாதவர், எல்லா வகை குலத்தில் இருப்பவர் மற்றும் எல்லா வகை மதத்தில் இருப்பவர் இங்ஙனம் மேற்குறிப்பிட்ட எல்லாவற்றையும் தாண்டி ஒவ்வொருவருக்கும் வலி என்று ஒன்றுண்டு மற்றும் உணர்வு என்றும் ஒன்றுண்டு. இதை அறிந்து வாழ்பவன் மனிதன். இதை உணர்ந்து செயல்படுபவன் மாமனிதன். சகோதரத்துவத்தை வளர்க்கிறோம் என்கிறோம் சந்தர்ப்பம் வரும் போது உடைக்கிறோம். சமாதானத்தை வளர்க்கிறோம் என்கிறோம் புறாவைக்காட்டி சந்தர்ப்பம் வரும் போது சண்டையிட்டு மாள்கிறோம் புறங்காட்டி. ஒவ்வொருவரும் மரணிக்கும் போது வருவது மரண பயமட்டுமல்ல மரண வலியும் தான். அந்த மரண வலியை நாம் நினைவில் கொண்டால் அடுத்தவர்களுக்கு மன வலியையோ, உடல் வலியையோ கொடுக்க நம் மனம் நாடாது என நான் நினைவிற்கொள்ள நினைக்கிறேன். நீங்கள். . . . . ?

One thought on “சிறு கதை 🙂 சிறு துளி 13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =