அனுபவம் 15

35 வயதுடைய ஒருவர் ஒரு கோயிலின் அருகில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது வழிபோக்கராக இருந்த ஒரு பெரியவர் அந்த பிச்சைக்காரருக்கு தர்மம் செய்கிறார். அதே பிச்சைக்காரரை அந்த பெரியவர் வேறொரு நாள் ஒரு சர்ச்சிற்கு முன் அமர்ந்து பிச்சை எடுப்பதை பார்க்கிறார் அங்கும் அந்த பிச்சைக்காரருக்கு தர்மம் செய்கிறார். மற்றுமொரு நாள் அந்த பிச்சைக்காரரை ஒரு தர்காவின் முன் அமர்ந்து பிச்சை எடுப்பதை பார்த்த அந்த பெரியவர் அங்கேயும் அவருக்கு தர்மம் செய்து விட்டு அந்த பெரியவர் பிச்சை எடுத்து கொண்டிருப்பவரிடம் பேசத்துவங்குகிறார். என்னை தெரிகிறதா? என்று கேட்கிறார். ஊம் உங்களை எனக்கு தெரியும் உங்களிடமிருந்து அடிக்கடி தர்மம் பெற்றிருக்கிறேன் எப்படி மறக்க முடியும் என்கிறார். மேலும் அந்த பெரியவர் அவரிடம் கேட்கிறார் இங்கே கோயிலுக்கும் , சர்ச்சிற்கும், தர்காவிற்கும் வரும் மக்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களென்று. அதற்கந்த பிச்சைக்காரர் கூறுகிறார் இவ் மூன்று இடத்திற்கும் வரும் மக்களிடம் நல்ல மனமிருக்கிறது மற்றும் பணமும் இருக்கிறது அதனால் தான் எனக்கும் கொடுக்கிறார்கள் என்றார். இதைக்கேட்ட பெரியவர் அவரிடம் கேட்கிறார் அப்படியென்றால் கடவுள் இருக்கிறாரா? என்றார். அதற்கந்த பிச்சைக்காரர் அது எனக்கு தெரியாது ஏனென்றால் கடவுள் இருந்தால் எனக்கேன் அடுத்தவரிடம் கையேந்தும் நிலை என்றார். இதைக் கேட்டப் பெரியவர் அந்த பிச்சைக்காரரிடம் கேட்கிறார் எனக்கு ஒரு பத்து ரூபாய் வேண்டும் கொடுப்பீர்களா? என்றார். அதற்கந்த பிச்சைக்காரர் எனக்கு கடவுளுமில்லை, நல்ல மனமும் இல்லை, என்னிடம் பணமும் இல்லை என்றார். இப்படி பளிச்சென்று உண்மை உரைத்த இந்த பிச்சைக்காரரிடமிருக்கும் விரக்திக்கு காரணம் எந்த கடவுள்? இது நான் உங்களிடம் கேட்கும் கேள்வி. ஆனால் அந்த பெரியவரோ என்ன செய்கிறார் தெரியுமா? அந்த பிச்சைக்காரருக்கு ஒரு வியாபாரம் செய்து பிழைப்பிற்காக ஒரு கடை வைத்து கொடுக்க முயல்கிறார். அப்போது பிச்சைக்காரர் அந்த பெரியவரிடம் கேட்கிறார் இந்த உதவியை ஏன் எனக்கு செய்கிறீர்கள் என்று ஒரு வித பயத்துடன். அதற்கந்த பெரியவர் அந்த பிச்சைக்காரரின் ( shoulder ) தோள் பட்டையின் மீது கை போட்டுக்கொண்டு கூறுகிறார் இதுவரை நான் கடவுளை நேரில் பார்த்ததில்லை இருப்பினும் கடவுள் ஒருவன் இருக்கிறான் என்ற பயம் உண்டு என்னிடம் மற்றும் கடவுள் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளச்சமும் உண்டு. அதனால் தான் நல்ல மனிதரை காணும் போது உதவ வேண்டுமென நினைப்பேன் மற்றும் உதவியப்பிறகு மனநிறைவுடன் ஆலயத்திற்கு செல்வேன் என்றார். இதை கேட்ட பிச்சைக்காரர் அந்த பெரியவரிடம் கேட்கிறார் எதை வைத்து என்னை நல்ல மனிதர் என்று தீர்மானீத்தீர். அதற்கந்த பெரியவர் கூறுகிறார் உங்கள் வார்த்தைகளில் உண்மையையும், பொருமையையும் கண்டேன் எப்படியென்றால் ஆலயத்திற்கு முன் நின்றே கடவுள் எனக்கில்லை என்று உங்கள் மனதில் இருந்த உண்மையை கூறினீர்கள் சிறிதளவும் பயமின்றி மற்றும் நான் உங்களிடம் பத்து ரூபாய் கேட்டதற்கு ஒரு வார்த்தையில் என்னிடம் இல்லை என்று கூறியிருக்கலாம் ஆனால் எனக்கு பொருமையுடன் பதிலுரைத்தீர்கள் எனக்கு கடவுளுமில்லை, நல்ல மனமும் இல்லை, என்னிடம் பணமும் இல்லை என்று. ஒரு மனிதனிடம் உண்மையும், பொருமையும் இருப்பின் அந்த மனிதன் தன் வாழ்க்கையில் முன்னேறமுடியுமென்ற நம்பிக்கை என்னிடம் இருப்பதால் தான் உங்களுக்கு உதவ வேண்டுமென்று முன்வருகிறேன் மற்றும் பிறக்கும் போது நாம் எதையும் கொண்டு வரவில்லை ஆனால் நாம் இறக்கும் போது நாம் செய்த புண்ணியத்தை எடுத்து செல்வோம் நம்முடன். நம்மோடுமட்டுமல்லாமல் அந்த பலனில் சிறிதளவு நம் சந்ததிகளுக்கு விட்டும் செல்வோம் என்றார். இதைக்கேட்ட பிச்சைக்காரர் அந்த பெரியவரிடம் கேட்கிறார் இந்த வியாபாரக் கடையை எந்த ஆலயத்தின் முன் வைக்க வேண்டுமென்று. அதற்கந்த பெரியவர் புன்னகைத்து கொண்டே ஒரு வேதம் கூறுகிறது அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று, அடுத்த வேதம் கூறுகிறது தட்டுங்கள் திறக்கப்படுமென்று , மூன்றாவது வேதம் கூறுகிறது அவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது அவன் கொடுக்காததை யாராலும் கொடுக்க முடியாது என்று. நான் இம்மூன்று வேதத்தில் உள்ளவற்றையும் வெவ்வேறாக காணாமல் ஒன்றாக சேர்த்து இறைவன் ஒருவனே என்ற கொள்கையில் நான் இருப்பதால் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வையுங்கள் அத்துடன் இறை அச்சமும் வியாபாரத்தில் கலப்பின்றி செயல்படுங்கள் இறைவன் அதற்கான கூலியை கூறையை பிய்த்துக் கொண்டு கொடுப்பான் என்பதை உணர்வீர்கள் என்றார். பிச்சைக்காரர் அந்த பெரியவரை பார்த்து ஐயா நீர் மாமனிதர் எனக்கூறி தொழிலை ஆரம்பித்தார் தான் வளமுடன் வாழ. ஒரு சில வருடங்களுக்கு பிறகு அந்த வியாபாரி தனக்கு உதவிய பெரியவரிடம் வருகிறார் ஐயா! எனக்கொரு உதவி நீங்கள் எனக்கு செய்ய வேண்டுமென்கிறார். அந்த பெரியவர் வியாபாரியின் முகத்தை உற்று நோக்கியபோது அந்த வியாபாரி ஐயா என்னால் இப்போது யாராவது ஒருவருக்கு உதவும் அளவிற்கு பணம் உள்ளது. அதை யாருக்கு உதவலாம் என்று கூறுங்கள் ஏனென்றால் அனுபவத்தில் நீங்கள் சிறந்தவர் என்றார். இதைக்கேட்ட அந்த பெரியவரின் கண்களும் மனமும் மகிழ்ச்சியால் நிறைந்தது. உடனே பதிலளித்தார் உங்களின் இந்த உதவும் பண்பை உங்கள் பிள்ளைகளின் மூலமாக அவர்களின் முன்னிலையில் உதவுங்கள் அதனால் உதவும் பண்புகள் வாழையடி வாழையாக வளருமென்றார். பொருமையும் உண்மையும் இருப்பின் ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேறலாம். இறை அச்சத்துடன் நல்லறமும் கலப்பற்ற வியாபாரமும் இருப்பின் வாழ்க்கை தரத்தில் முன்னேறலாம். நல்ல பகுத்தறிவு நிறைந்த அனுபவத்துடன் தன்னலம் கருதாது அடுத்தவருக்கு உதவும் பண்பிருப்பின் உதவும் கரங்களை வளர்க்கலாமென நல் நம்பிக்கையை விதைக்கிறேன் வாருங்கள் தோழர்களே!

One thought on “அனுபவம் 15”

  1. Simply amazing That words keep rocking, (A timely benefit, -though thing of little worth,
    The gift itself, -in excellence transcends the earth)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =