சிறு கதை 🙂 சிறு துளி 9

35 வயதுடைய ஒரு பெண் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அப்பெண்ணின் கணவர் ஒரு மாதத்திற்கு முன் இறந்து விட்டார். அந்த பெண் தன் கணவர் இறப்பதற்கு முன் மிகவும் சுறுசுறுப்பாகவும் மற்றும் உறவினர்களிடமும், வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் நன்றாக பேசி பழகிக்கொண்டிருந்தார். ஆனால் கணவரின் இறப்பிற்குப் பிறகு மெளனமாகவே உள்ளாள் மற்றும் இறந்த தன் கணவரின் சடலத்தின் முன் கூட அவளின் கண்களிலிருந்து கண்ணீர் வரவில்லை. அதனால் அவளின் பெற்றோர் அப்பெண்ணை மனநிலை நிபுணரிடம் ஆலோசனைக்காக அழைத்து செல்கிறார்கள். அப்போது ஆலோசனை கூறப்போகும் மருத்துவர் அப்பெண்ணிடம் கேட்க துவங்கினார் உன் பெயர் என்ன, என்ன வயது, குழந்தைகள் எத்தனை மற்றும் உங்களுடைய மனதில் உள்ள கஷ்டத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினார். தனிமையில் மருத்துவரின் முன் அமர்திருந்த பெண் அழ துவங்கினார். ஆம் எனக்கு திருமணமாகிய முதற்கொண்டு என் கணவர் இறக்கும் வரை நான் பட்ட கஷ்டங்கள் சொல்லிற் அடங்காது. என் கஷ்டங்களை நான் வெளிகாட்ட விரும்பாமல் உறவினர்களிடமும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் என் அன்பை பரிமாறி என் மன நிலையை பக்குவ படுத்திக்கொண்டேன். ஆனால் என் கணவர் இறந்த பிறகு என் தனிமையின் வலியினை மெளன அஞ்சலியாக செலுத்துகிறேன் என்றார். மெளன அஞ்சலி என்பது ஐந்து நிமிடங்கள் தானே ஏன் ஒரு மாதம் கழிந்தும் மெளனமாகவே இருக்கிறீர்கள் என்று மருத்துவர் கேட்கிறார். அதற்கந்த பெண் கூறினாள் இறந்த தலைவர்களுக்காகவும், நல் மனிதர்களுக்காகவும் செலுத்தும் மெளன அஞ்சலி அவர்களை மதிப்பதற்காக ஆனால் என் மெளன அஞ்சலி. . . ? என் மனதிற்கு கொடுக்கும் மரியாதை என்றாள். அதற்கந்த மருத்துவர் கூறினார் நீங்கள் மெளனமாக இருந்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகி மனநோயாளி ஆகிவிடுவீர்கள் என்றார். அதற்கந்த பெண் கூறினாள் என் கணவர் உயிருடன் இருந்த போது தான் நான் மன அழுத்தத்தில் இருந்தேன். அத்துடன் என் மன நிலையைப் பக்குவப்படுத்தியும் வைத்திருந்தேன். இப்போது என் கணவரின் மூலமாக எவ்வித துன்பங்களும் எனக்கில்லை அதனால் நான் முன்பை விட இப்போது தான் தெளிவான மனநிலையில் மெளனமாக இருக்கின்றேன் என்றாள். எப்போதும் பெண்களின் கண்ணீருக்கென்று ஒரு திறன் மற்றும் மரியாதை உண்டு. அக் கண்ணீர் ஒரு சிலரை கரை சேர்க்கும், ஒரு சிலரை கல்லறையில் சேர்க்கும். ஒரு பெண்ணின் கண்ணீரின் அர்த்தத்தை அறிந்து பண்படுத்தி வாழ்வதும் நல்லறம் பயக்குமென நினைக்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 4 =