சிறு கதை 🙂 சிறு துளி 8

அப்பாவும் பிள்ளையும் சாப்பிடுவதற்காக அமர்ந்திருக்கிறார்கள். அம்மா தோசைப்போட்டுக் கொண்டிருக்கிறார். பிள்ளை கூறுகிறான் அம்மா தோசை முறுவலாக இருக்க வேண்டுமென்று. ஆனால் அம்மா சமைத்த தோசை முறுவலாக இல்லை. அந்த தோசையை பிள்ளையின் தட்டில் வைத்துக் கொண்டே கூறுகிறார் அடுத்த தோசையை முறுவலாக போட்டு தருகிறேன் என்று. ஆத்திரமடைந்த பிள்ளை கூறுகிறான் ஏன் இப்படி செய்தீர்கள் என்று. அம்மா கூறினார் தப்புதாம்மா அடுத்ததை நன்றாக செய்கிறேன் என்று. அப்போது அப்பா பிள்ளையைப் பார்த்து கேட்டார் நீ இப்போது ஆத்திரமடைந்தது நியாயமானதா? என்று. பிள்ளை கூறினான் அப்பா நான் இப்ப கோபப்படாமல் கூறினால் அம்மா மறுபடியும் இவ்வாறே சமைத்து தருவார் அதனால் தான் என்றான். அதற்கந்த அப்பா கேட்டார் உனக்குபதிலாக அம்மா கோபத்துடன் இப்படி தான் இன்னிக்கு சாப்பிட வேண்டும் , இன்று இப்படி தான் வந்தது என்று கூறியிருந்தால் என்ன செய்திருப்பாய் என்றார். இதைக்கேட்டு முடிப்பதற்குள் பிள்ளையின் கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டது நான் செய்தது தவறுப்பா என்றான். அதற்கு தான் எப்போதும் அடுத்தவரை கேள்வி கேட்பதற்கு முன் ” நான் ஏன் இப்படி செய்தேன் ” என்று நம்மை நாமே கேட்டுக் கொண்டேமேயானால் நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லா காரியங்களிலும் திடமான தீர்க்கமான தீர்வுகளை காண முடியும். ஆம் அங்கே ஈகோ ( Ego ) இருக்காது, சகிப்புத் தன்மைக்கூடும், பொறுப்பில்லா பதில்களும், செயல்களும் இருக்காது, நம் வாயிலிருந்து வார்த்தைகள் வருவதற்கு முன் சிந்திக்கும் திறன் வளரும், பொருமை அதிகரிக்கும், நமக்கும் பிறருக்கும் இடையே உள்ள நட்பு நீடிக்கும், நமக்கும் பிறருக்கும் இடையே உள்ள புன்னகை வளரும் என்றார். இதைக்கேட்ட பிள்ளை அம்மா! தோசை நன்றாக உள்ளது என்று உரக்கக் கூறினான் சமையல் அறையில் இருந்த அம்மாவிடம். உடனே அந்த அம்மா புன்னகைத்த முகத்துடன் அடுத்த முறுவல் தோசையுடன் பிள்ளையின் முன்பு தோன்றினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =