சிறு கதை 🙂 சிறு துளி 11

வயதான ஒரு அம்மா அப்பாவிற்கு நான்கு ஆண் பிள்ளைகள். ஒரு நாள் அந்த அப்பா தன்னுடைய நான்கு குழந்தைகளையும் அழைத்து எனக்கு வயதாகி விட்டது உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு என்ன வேண்டுமோ கேளுங்கள். அதை உங்களுக்கு செய்து தருகிறேன் என்றார். உடனே உடனே தன் முதல் பிள்ளை கேட்க துவங்கினான் அப்பா. . . என் மனைவி குழந்தைகளுடன் வசிப்பதற்கு என் பிள்ளைகளின் பள்ளிக்கு அருகிலுள்ள வீட்டை எனக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றான். உடனே தகப்பனார் சரி என்றார். தனது இரண்டாவது பிள்ளை கேட்டான் அப்பா. . . நான் சொந்தமாக தொழில் நடத்த ஒரு அலுவலகம் வேண்டுமென்றார். அப்பா சரி என்றார். தனது மூன்றாவது மகன் கேட்டான் அப்பா. . . நானும் ஒரு பெண்ணும் ஒருவரையொருவர் நேசிக்கிறோம். எங்களுக்கு உங்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்தால் நாங்கள் முன்னேறி விடுவோம் என்றான். அப்பாவோ சரி என்றார். கல்லூரியில் கடைசி வருடத்தில் படித்துக் கொண்டிருக்கும் தனது நான்காவது மகன் கேட்கிறான் அப்பா. . . எனக்கு உங்கள் தோளும், உங்கள் தங்கையின் மகளையும் திருமணம் முடித்து வைப்பீர்களா? என்றான். அப்பா திகைப்புடன் ஆனால் தன்னை சமாளித்துக் கொண்டு மகனே! எனக்கு மிகவும் வயதாகி விட்டது என் தோள் எத்தனை நாட்கள் உனக்கு கிடைக்குமென்று தெரியாது என்றார். அதற்கந்த மகன் கூறினான் அப்பா உங்க தோள்க்கு பிறகு உங்களின் தங்கை மகள் என்னுடன் இருக்கிறாளே என்றான். அதற்கந்த அம்மா கேட்கிறார் உன் அத்தை பெண்ணா? ஆம் அம்மா. என் அப்பா நல்லவர் அவரின் தொப்புள் கொடி உறவல்லவா என் அத்தை மகள் அதனால் அவளும் நல்லவளாகதான் இருப்பாள் என்றான். தகப்பனார் இங்கே குறுக்கிட்டு மகனே சொந்தத்தில் திருமணம் முடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு சில பிரச்சனைகள் வருமென்று கூறுகிறார்களே என்றார். அதற்கந்த மகன் கூறினான் நம் நாட்டில் உள்ள மருத்துவ துறையை அன்னந்து பார்க்கும் உயரத்தில் உள்ளது குழந்தை கருவாக இருக்கும் போது துடங்கி பிறக்கும் வரையில் குழந்தையின் வளர்ச்சியை கண்காணிக்கும் சிகிச்சை முறைகள் பல உண்டு. ஆனால் கூட்டு குடும்பங்களை காணும் போது நாம் கீழ் நோக்கி காண வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கூட்டு குடும்பங்கள் காணவில்லை என்றான் இதைக்கேட்ட அம்மா அப்பா பூரித்து நின்றார்கள் ஏனென்றால் இதுவும் ஜெனரேஷன் கேப்பில் ( Generation Gap ) வளர்ந்த மனப்பான்மை அல்லவா? இங்கே ஒரு கூட்டுக்குடும்பம் வளரும் என நான் நினைக்கிறேன். நீங்கள். . . . .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =