சிறு கதை 🙂 சிறு துளி 10

நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் எவ்வளவு திடமானவர்கள், பணிவானவர்கள், பொதுநல ஆர்வம் உடையவர்கள் என்பதற்கு ஒரு உண்மை துளியை உரமாக்க விரும்புகிறேன் இங்கே. ஆம் இரண்டு நண்பர்கள் தங்களின் பள்ளி பபருவத்திலேயே தீர்க்கமான முடிவெடுக்கிறார்கள் நாம் படித்து முடித்த பிறகு சுய தொழில் செய்து தொழிலதிபராக வேண்டும். யாருக்காகவும் எதற்காகவும் அடிமையாக தொழில் செய்ய கூடாது மற்றும் மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று முடிவெடுக்கிறார்கள். அதேப்போல் மென் பொருள் பொறியலில் தேர்ச்சி பெற்று கல்லூரி படிப்பையும் முடித்து விட்டு experience க்காக ஒரு வருடம் மென் பொருள் மேம்பாட்டு கம்பெனியில் பணிக்கு அமர்ந்து மாதத்திற்கு 70 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து விட்டு தங்களின் சுய தொழில் முன்னேற்றத்திற்காக அப்பணியை உதறிவிட்டு தன் பெற்றோரின் ஆதரவோடும், தங்களின் தன்னம்பிக்கையோடும் மென் பொருள் மேம்பாட்டு கம்பெனி ஆரம்பிக்கிறார்கள் வீட்டிலிருந்த படியே. இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது ஆறு மாதத்திற்கு பிறகு ஒவ்வொரு மாதமும் நான்கு ஆயிரம் ரூபாய் வருமானமாக அவர்களின் சுய தொழிலிருந்து கிடைக்கிறது. தினந்தோறும் இவ்விருவரும் போன் மூலமாக தங்களின் வேலையைப்பற்றி பேசிக்கொள்வது வழக்கம். இன்றும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் தன் நண்பன் கூறுகிறார் நேற்று எனக்கு சிறிதளவு மன நிறைவு கிடைத்தது என்று கூறிவிட்டு ஆம் நேற்று நான் கடற்கரைக்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு பெண் குழந்தை ice cream வண்டியில் எழுதியிருந்த அவ்வெழுத்துக்களை i, c, e என்று மெதுவாக படிப்பதை கண்டேன் ஆனால் சிறிது நேரத்தில் அக்குழந்தையின் தந்தை அக்குழந்தையை அடித்து இந்த மாலைகளை போய் விற்றுவிட்டு வா என்று அதட்டினார். அக்குழந்தையோ பயத்துடன் அப்பொருளை தன் கைகளில் ஏந்திய படி நகர ஆரம்பித்தது. ஆனால் என் சட்டை பையில் இருந்த அதாவது இந்த மாதத்தின் வருமானமான நான்கு ஆயிரம் ரூபாய் எனக்கு கனத்தது என் மனத்துடன் சேர்த்து. உடனே அந்த பெண்ணின் தந்தையிடம் அந்த நான்காயிரத்தையும் கொடுத்து அவரிடம் கெஞ்சி கேட்டேன் தயவு செய்து இக்குழந்தையை படிக்க வையுங்கள். இக்குழந்தை நன்றாக படித்து இப்போது ஈட்டும் வருமானத்தை விட பன்மடங்கு உங்களுக்கு ஈட்டி தருவாள் என்றேன். அவர் எந்த அளவிற்கு என்னிடமிருந்து புரிந்து கொண்டார் என எனக்கு தெரியவில்லை ஆனால் எனக்கு ஆணித்தரமாக புரிந்து பதிந்தது நாம் நன்கு பொருளீட்டும்போது ஏழை குழந்தைகளின் படிப்பிற்காகவும், ஏழைகளின் மருத்துவத்திற்காகவும் கவனம் செலுத்த வேண்டுமென்று கூறினார். அதைக்கூறக்கேட்ட நண்பர் தன் அம்மாவிடம் கூறுகிறான் அம்மா. . . ! நாம் நம்முடைய கடின உழைப்பினால் ஈட்டும் பணத்திற்கு மதிப்பு அதிகம் அதை நல்லவற்றிற்காக சிலவு செய்யும் போது கிடைக்கும் மன நிறைவு அதைவிடவும் அதிகம் மற்றும் இப்பேர்ப்பட்ட பொதுநல எண்ணம் கொண்ட நண்பன் எனக்கிருப்பதைக்கண்டு பெருமைப்படுகிறேன் என்றான். இப்பேர்ப்பட்ட இளைஞர்கள் மரத்தின் விழுதுகள் என்பதைவிட ஆலமரத்தின் ஆணிவேர்கள் என்றால் அது மிகையாகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =