அனுபவம் 14

ஒரு பெரியவரும் ஒரு 24 வயதுடைய இளைஞரும் ஒரு பேருந்தில் முன் வரிசையில் ஒன்றாக அமர்ந்து பயணிக்கிறார்கள். அந்த பெரியவர் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இளைஞரிடம் பேசத்துவங்குகிறார். எங்க தம்பி போறீங்க. பெயர் என்னவென்று கேட்கிறார். அந்த இளைஞர் கூறுகிறார் தன் பெயர் அசோக் என்று மற்றும் ஊர் பெயரும் கூறுகிறார். பிறகு அந்த பெரியவர் கேட்கிறார் அசோக் அந்த ஊரில் யார் இருக்கிறார்கள் என்று. அங்கே என்னுடைய சொந்தங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு என்னுடைய திருமணப்பத்திரிக்கை கொடுப்பதற்காக செல்கிறேன் என்றார். அதற்கந்த பெரியவர் கேட்கிறார் என்னப்பா அசோக் லவ் மேரேஜ்ஜா? இதைக்கேட்டதும் அசோக் அவரைப் பார்த்து புன்னகைத்து விட்டு அப்பா அம்மா பார்த்து செய்து வைக்கும் திருமணம் என்றார். மறுபடியும் அந்த பெரியவர் என்னப்பா அசோக் உன்னிடமிருந்து நான் எதிர்பார்த்தேன் லவ் மேரேஜ்ன்னு நீ என்னடாயென்றால் அரேன்ஜ்டு மேரேஜ் என்கிறாய் என்றார். இதைக்கேட்ட அசோக்கின் முகத்தில் மெளனம் கலைக்கட்டியது. இதைக் கண்ட பெரியவர் சிறிது நேரம் கழித்து தன் கைகளை அசோக்கின் மீது போட்டு என்னப்பா அசோக் என்றார். பிறகு அசோக் மெளனமாக பேசத்துவங்கினான்.அப்பா இந்த திருமணம் எனது வாழ்கையின் திருப்பு முனை. நானும் ஒரே கல்லூரியில் படித்தோம் மற்றும் ஒருவரை ஒருவர் நேசித்தோம். இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் பெற்றோர்களின் அனுமதியுடன் என்று தீர்மானித்தோம். ஒரு நாள் நாங்கள் இருவரும் முடிவெடுத்தோம் இன்று இரவு எப்படியாவது நம் பெற்றோர்களிடமிருந்து சம்மதத்தை பெற வேண்டுமென்று. அன்றிரவு என் அம்மா அப்பாவிடம் இதைப்பற்றி பேசினேன். சில சலசலப்புகள் ஏற்பட்டது பிறகு உறங்கி விட்டேன். மறுநாள் விடிந்தது என் போனில் மெசேஜ் பார்த்தேன் கவிதாவின் அம்மா அப்பா இருவரும் இறந்து விட்டார்கள் என. அதைக் கண்டவுடன் என் மனதில் அச்சம் தாண்டவமாடியது என்ன செய்வது எப்படி அங்கே செல்வதென்று மற்றும் நான் அங்கு செல்லவில்லை என்றால் என் கவிதாவிற்கு யார் ஆறுதல் கொடுப்பார்கள் என்று. என் தாய் தந்தையிடம் இதைப்பற்றி கூறவில்லை நான் மட்டும் சென்றேன் கவிதாவின் வீட்டிற்கு. அங்கே தன்னிலையை மறந்த நிலையில் அழுதுக்கொண்டிருந்தாள் தன் தாய் தந்தையின் சடலத்தின் அருகில். என்னால் அவளிடம் பேச முடியவில்லை மற்றும் அங்கிருந்தவர்கள் கூறினார்கள் அந்த அம்மா அப்பா பல்லி விழுந்திருந்த சாப்பாட்டை உண்டதால் தான் இறந்து விட்டார்களென்று. இதை கேட்டவுடன் ஏதோ ஒரு நெருடல் மட்டும் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. வீட்டிற்கு சென்ற பிறகும் இதைப்பற்றிய சிந்தனையில் இருந்தேன். மூன்று நாட்கள் கழித்து கவிதாவிடமிருந்து போன் வந்தது ஒரு இடத்திற்கு வரக்கூறி. நானும் அவ்விடத்திற்கு சென்றேன் அவளையும் கண்டேன். இங்கும் அவள் தன்னிலையை மறந்த நிலையில் பலத்த ஓசையுடன் அழத்துடங்கினாள். அவளின் அழுகையில் ஆழமும் அழுத்தமும் தெரித்தது. அவள் கூறத்துவங்கினாள் அசோக் என் அம்மா அப்பா எப்படி இறந்தார்கள் தெரியுமா? பல்லி விழுந்த சாப்பாட்டை உண்டு அல்ல விஷ மருந்தை அருந்தி. ஆம் அன்றிரவு நாமிருவரும் பேசியதுப்போல் என் பெற்றோர்களிடம் நம் விருப்பத்தை கூறினேன். அவர்கள் என்னிடம் அம்மா மணி ஆகிவிட்டது நீ போய் உறங்கும்மா நாளைக்கு இதைப்பற்றி பேசிக்கலாமென்று கூறினார்கள். அவர்கள் என்னை அடித்தே கொன்றிருக்கலாம் ஆனால் எதுவுமே கூறாமல் விஷம் அருந்தி விட்டு அந்த காலி பாட்லை என் கை பையில் வைத்திருந்தார்கள். என் தம்பி தங்கைகளைப் பற்றி எனக்கு நினைவூட்டவே இக்காரியயத்தை செய்தார்களென நினைக்கிறேன். அதனால் இப்போது நான் முடிவெடுத்திருக்கிறேன் என் அத்தை பையனையே திருமணம் செய்துக் கொள்ளலாமென கூறினாள். என் வாயும், மனமும் அடைத்து ஒரு கனம் நின்றேன். பிறகு என்னை ஒரு நிலைப்படுத்தி அவளிடம் கூறினேன் நான் என் அம்மா அப்பாவிடம் பேசுகிறேன். அவர்கள் நமக்காக நல்ல முடிவை எடுப்பார்கள், கொடுப்பார்கள் கவலைப்படாதே மற்றும் அவசரப்படாதே தவறான முடிவுக்கு என்றேன். அதற்கவள் கூறினாள் இல்லை அசோக் எனக்கேற்பட்ட இந்த மன வலியும், இந்த தாய் தந்தையை இழக்கும் நிலையும் உனக்கும் ஏற்பட்டு விடக்கூடாது, ஒருவேளை உன் தாய் தந்தை என் மேல் பரிதாபப்பட்டு நம் திருமணத்திற்கு சம்மதித்து பிறகு திருமணமும் ஆகிவிட்டதென்று வைத்துக்கொள் ஏதாவது ஒரு சூழ்நிலையில் உன் பெற்றோர்கள் என்னிடம் கடித்துக் கொள்ளும்போது ஒருவேளை என் கோபத்தால் என் குரல் உயர்த்தும் சூழலும் ஏற்படக் கூடும். ஏனென்றால் என் பெற்றோர்களை இழந்த மன நிலையில் நான் இருப்பதால் அல்லது நான் என் பெற்றோர்களை இழந்த மன நிலையில் இருப்பதால் உன் பெற்றோர்கள் என் மேல் பரிதாபப்பட்டு நான் செய்யும் அனைத்து தவறான செயல்களையும் கண்டிக்காமலும், தண்டிக்காமலும் விட்டு விடும் சூழலும் ஏற்படக்கூடும். எது எப்படியோ நான் உன் தாய் தந்தையையும் நான் இழந்த என் பெற்றோர்களை போலவே நினைக்கிறேன் என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டாள் என் பதிலுக்காக நிற்காமல், இடிந்துப்போன நான் என் பெற்றோர்களிடம் முறையிட்டேன் நடந்தவைகள் அணைத்துடனும். என் பெற்றோர்கள் கூறினார்கள் கவலைப்படாதே அசோக் நாளை நாம் கவிதாவின் வீட்டிற்கு செல்வோமென்று. ஒரு பூஞ்சோலையில் அதிகாலையில் விடியும் சூரியனைப்போல் என் மனதிலொரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. விடிந்ததும் என் பெற்றோர்களுடன் கவிதாவின் வீட்டிற்கு பழ தட்டுகளுடன் சென்றோம். கவிதாவும் வரவேற்றாள் எங்களை. காப்பி அருந்தினோம். அம்மா கவிதாவை பார்த்து வாம்மா இங்கே வந்து உட்காரும்மா என்றார். புன்னகைத்தாள் கவிதா அப்போது வீட்டிற்குள் நுழைந்தார் ஒரு இளைஞன். கவிதா கூறினாள் அம்மாவிடம் அம்மா…! இவர் தான் நான் திருமணமுடிக்கவிருப்பவர். என் அத்தை மகன் என்றாள். என் அம்மாவிற்கு வார்த்தையும் வரவில்லை, என் முகத்தையும் பார்க்க வில்லை சட்டென்று பழத்தட்டுகளுடன் என் அம்மாவும், அப்பாவும் எழுந்தார்கள் கவிதாவையும் அவளின் அத்தை மகனையும் ஒரு சேர நிறுத்தி கவிதா இனி என் மகளுடன் நீயும் ஒன்று என்பதற்காக இந்த பழத்தட்டுக்கள் என்று கூறிவிட்டு அவர்கள் இருவரையும் ஆசீர்வாதமும் செய்தார்கள். அங்கே இருந்த என் அம்மா, அப்பா, நான், கவிதா மற்றும் கவிதாவின் அத்தை மகன் உட்பட அத்துணைப்பேர் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது. மனங்களோ நிறைவால் மூழ்கியது. அன்று தான் நான் உணர்ந்தேன் தெய்வீக அன்பின் ஆழத்தை என்றான் அசோக். இதைக்கேட்ட அந்த பெரியவர் திடுக்கிட்டார். என்ன அசோக்? லவ் பண்ணப் பெண்ணை நண்பராகக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது அதுவும் நீ கவிதாவை ஒரு தங்கையாக ஏற்றுக் கொண்டேன் என்கிறாயே! என்றார். ஆம் ஐயா லவ் மேரேஜில் அவர்கள் இருவர் மட்டுமே சந்தோஷமாக வாழமுடியும் அவர்களை பெற்றவர்கள் எத்தனையோ சந்தோஷங்களை இழந்திருப்பார்கள், ஏன் ஒரு சில பெற்றோர்கள் கவிதாவின் அம்மா அப்பாவைப் போல் இறந்தும் இருப்பார்கள், மற்றும் ஒரு சிலர் லவ் மேரேஜ் செய்திருப்பார்கள் அவர்களுக்கு ஒரு குழந்தை என்பதற்காக அந்த பெண்ணிடமே சம்மதம் பெற்று மறு திருமணம் செய்வதையும் பார்க்கிறோம் இதை எல்லாவற்றையும் விட யாருக்கும் தீங்கு ஏற்படாமல் கவிதாவின் தம்பி தங்கைகளுக்கும் என் பெற்றோர்களின் மூலமாக ஒரு ஆதரவு கொடுத்ததில் பெருமிதப்படுகிறேன் என்றான். நான் கூறிய இக் காரணங்கள் எல்லாம் என்னை சமாதானம் படுத்திக்கொள்வதற்காக என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ஐயா அன்பு என்பது நாம் செயல் படுத்தும் முறையிலும், அங்கீகரிக்கும் முறையிலும் உள்ளது. என் திருமணத்திற்கு என்னுடைய இரு தங்கைகளின் சீர் வரிசையுடன் சுற்றம் சூழ, பெற்றோர்களின் நல் வாழ்த்துக்களுடன் என் திருமணம் நடைபெறும் என்றான் அசோக். அந்த பெரியவர் கேட்டார் அசோக் எனக்கில்லையா உன் திருமண பத்திரிகை…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + fifteen =