பெண்மை 10

எந்த எதிர்பார்ப்புகளும் எவ்வித நோக்கங்களுமின்றி இவ்வளவு பெரிய உலகில் பிறந்து வளரும் நம்மால் நல்ல மற்றும் கெட்ட ஆண்களை அறிவதும், தவறுதலாக எவ்வித ஆண்கள் தனக்கு கணவராக கிடைத்து விட்டாலும் மனம் தளராமல் சமாளிக்கும் திறனும் பெண்களுக்கு உண்டு ஆனால் நாம் பொருமையுடன் நடைமுறைகளை இயற்கையான வழியில் கையாலுவதில்லை. ஆம் ஒவ்வொருவரின் மனமும் கண்ணாடிப் போல் அது உடைந்து விட்டால் ஒன்றாக இணைப்பது கடினம் என்போம். ஆனால் அதை தவறாக புரிந்துள்ளோம் என நினைக்கிறேன். மனம் என்பது கண்ணாடி அல்ல அது ஒரு தங்கத்தகடு அது அனுபவத்தால் பக்குவப்பட்டு பக்குவப்பட்டு கண்ணாடிப் போல் பிரதிபலிக்கும் பக்குவப்படுத்தப்பட்ட தங்கமாக. அப்போது நாம் யாரைக்கண்டாலும் அவர்களின் நடவடிக்கைகளே போதும் அவர்களிடம் உறவாடக்கூட தேவையில்லை அவர்களைப்பற்றி அறிய. நம் மனமாகிய தங்கத்தகடு கூறும் அவர்கள் எப்படிப்பட்டவர்களென்று. அதனால் தான் பாருங்கள் வயதில் முதிர்ந்தவர்கள் கூறும் வார்த்தைகளும் அனுபவங்களும் நமக்கு வெறுப்பை தரும். ஆனால் நாளடைவில் அதுவே உண்மை மற்றும் நடந்தது என்போம். ஒரு ஆணுக்கு நிகராக ஒரு பெண் என்று கூறலாம். ஆனால் ஒரு பெண்ணுக்கு நிகராக ஆண் என்று கூறமுடியாது. ஏனென்றால் பெண்ணென்பவள் ஒரு தாய் உருவம். எனவே தான் ஒரு பெண்ணுக்கு நிகர் ஒரு பெண் மட்டுமே. அவள் சக்தி வாய்ந்தவள், துணிந்து வாழ்பவள், பாசத்தில் மிஞ்சியவள், நேசத்தில் கணிந்தவள், கொடுப்பதில் வள்ளல்லவள். அப்பேற்பட்ட அவளால் ஒரு ஆணை சமாளிக்க முடியாதா? முடிந்த வரை பொருமையுடன் சமாளி முடியவில்லையென்றால் அடுத்த ஆணிடம் தான் தீர்வு கிடைக்குமென்று நம்பி ஏமாந்து விடாதே. ஏமாற நீங்களே தயாராக இருக்கும் போது ஏமாற்றுபவர்களும் மிகவும் தயார் நிலையில் தானே இருப்பார்கள். அதேப்போல் ஏமாற்றம் அடைந்தப்பிறகு அதையே நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாவதும் மதியின்மை. இவ்வுலகில் பிறந்தோம் வளர்ந்தோம் இறப்போம் என்பது மட்டுமல்ல. பிறந்ததிலிருந்து வளர்ந்த வரை என்ன கற்றோம், வளர்ந்த பிறகு கற்றதை எவ்வாறு நடைமுறை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினோம் என்று பட்டியலிட்டு நடத்துவதில்லை வாழ்க்கை. இவை அனைத்தையும் தினந்தோறும் வாழ்கையில் நடைமுறை படுத்துவோமேயானால் நாம் இறக்கும் தருணத்தில் நம் நினைவுகளை திரும்பி பார்போமேயானால் நாம் செய்த திருப்திகரமான நற் செயல்களினால் மனநிறைவு கிடைக்குமாயின் அதுதான் நாம் பிறந்ததின் பலன். மற்றும் இறப்பு என்கிற முடிவு. அது சிறு செயலாகவும் இருக்கலாம், பெரும் செயலாகவும் இருக்கலாம். அதிலும் தன் பெண்மையை காப்பது என்பது தலைச்சிறந்த செயலாகும். பெண்மையை காப்பது என்பது தன்னிறைவு மட்டுமல்ல பொது நிறைவுங்கூட. கணவன் இன்றியும், கணவன் இருந்தும் இல்லாமலும், கணவன் உயிருடன் இருந்தும் தன்னுடன் இல்லாமலும் எத்தனையோ பெண்கள் இவ்வுலகில் எத்தனையோப் போராட்டங்களுடன் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நான் கூறுவது மனமுடைய வேண்டாம் பெண்ணே! சந்தோஷங்கள் உண்டு உன்னை சுற்றியே. நேரத்தைக் கடத்தாதே, சோர்ந்தும்விடாதே , துணிவோடு உன் தாய் தந்தையிடம் உறவாடு, குழந்தைகளின் காப்பகம் செல் அவர்களுடன் கூடி விளையாடு, முதியோர் இல்லம் செல் அவர்களுக்கு ஒரு மகளாகப் பணிவிடைச் செய், இவ்வித பொது நல சேவைக் கொடுக்கும் மன நிறைவு மற்றும் மன அமைதி. இதைக்காணும் நீ ஈன்ற பிள்ளைகளும் பொருப்புடன் வளரும் உனைப்பார்த்து. பெண்களே நீங்கள் ஆளப்பிறந்தவர்கள் அழப்பிறந்தவர்கள் அல்ல. நாட்டை ஆள்பவர்கள் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள் என்பதல்ல. நாட்டை ஆள்பவர்களுக்கு ஆயிரம் பேர் உண்டு பாதுகாப்பிற்கு. ஆனால் தன் பெண்மையை ஆள்பவளுக்கு அவள் மட்டுமே பாதுகாப்பு. ஆகவே பெண்மையை ஆளும் ஒவ்வொரு பெண்ணும் அரசியே. அத்துடன் விவேகமும் இருந்து விட்டால் ஒவ்வொரு பெண்ணும் பேரரசியே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =