சிறு கதை 🙂 சிறு துளி 7

இன்னும் 10 நாட்கள் தான் இருக்கிறது திருமணமாக அப்பெண் தன் அம்மாவிடம் கேட்கிறாள் அம்மா! எனக்கொரு விஷயம் மட்டும் புரிய மாட்டேங்குதும்மா. அம்மா திடுக்கிட்டாள் தன்னை சுதாரித்துக் கொண்டு என்னம்மா புரியவில்லை என்றார். அதற்கந்த மகள் கூறுகிறாள் அம்மா! நீங்கள் என்னை நல்ல முறையில் வளர்த்தியுள்ளீர்கள் இதை அடுத்தவர்களெல்லாம் கூறுகிறார்கள் லஷ்மியை கல்யாணம் பண்ணிக்கிறவங்க கொடுத்து வைத்தவர்கள் என்று மற்றும் என் அம்மா அப்பாவும் குணத்திலும், பண்பிலும் சிறந்துள்ளீர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.அப்படியிருக்க கணவர் வீட்டிற்கு சென்றவுடன் பெண்ணோடு சேர்த்து அவளின் தாய், தந்தையையும் கூட அவர்களுக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. இது பெரும்பாலோர் குடும்பத்தில் நடக்கிறது என்றாள். அப்போது அம்மா லஷ்மியை பார்த்து புன்னகைத்து விட்டு கூற துவங்கினார்.ஆம் 1. நீ திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் போது தன் பிள்ளை நன்றாக வாழ வேண்டுமென்றுதான் நான் நினைப்பேன். ஆனால் உன் கணவரின் அம்மாவோ தன் பரம்பரையே நன்றாக வளர்ந்து வாழ வேண்டுமென்று நினைப்பார். 2. சில நாட்களுக்கு பிறகு உனக்கும் எனக்கும் உறவில் உள்ள தூரம் குறையும் போது என் பிள்ளை அங்கு பொறுப்பாக நிம்மதியாக வாழ்கிறாள் என நிம்மதி பெருமூச்சு விடுவேன். ஆனால் அங்கே உன் கணவருக்கும், அவரின் அம்மாவுக்கும் உள்ள இடைவெளி தூரமாகும் போது தான் மட்டும் தனியாக எவ்வாறு இப் பரம்பரையை வளரச் செய்வேன் என்று நிம்மதியிழந்த பெருமூச்சு விடுவாள் என்றாள். இதைக் கேட்ட லஷ்மி கூறினாள் அம்மா! உன்னிடத்தில் தன்னலத்தை கண்டேன். அம்மம்மா! என் கணவரின் அம்மாவிடத்தில் பொதுநலத்தை காணுகிறேன் என்றதோடு அவர்களுக்கு பக்கபலமாக ஒரு மகளாக செல்வேன் என்றாள்.

One thought on “சிறு கதை 🙂 சிறு துளி 7”

  1. இருவருக்கும் இடையில் இப்படியொரு கதை இருக்கும் என்பது இன்றுதான் நான் அறிந்து கொண்டேன் உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் நன்றிகள் பல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 9 =