சிறு கதை 🙂 சிறு துளி 6

கமலா என்பவர் வயது 45. சீதா என்பவர் வயது 25. இந்த இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிப்புரிகிறார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவ்விருவரும் குடும்ப விஷயங்களை பற்றி பேசுவது வழக்கம். இதில் சீதாவோ திருமணம் ஆகாதவர். அதனால் எப்பொழுதும் கமலாம்மா புலம்பிக்கொண்டே இருப்பார் தன் குடும்ப பாரத்தால். ஒரு நாள் இருவரும் மதிய உணவிற்காக அமர்கிறார்கள் அன்று வழக்கத்தை மீறி எதுவும் பேசாமல் அழுதுக் கொண்டே இருந்தார். அப்போது சீதா கமலாம்மாவை பார்த்து கூறினார் ஆன்ட்டி ஒரு பெண்ணால் முடியாதது எதுவுமே இல்லை மற்றும் ஒரு பெண் நினைத்தால் எல்லாவற்றையும் மாற்றி விடலாம் என்றாள். கமலாம்மா சட்டென்று தன் அழுகையை நிறுத்தி விட்டு சீதாவின் முகத்தை நோக்கினார். சீதாவோ திடுக்கிட்டாள் ஆன்ட்டி நம்மேல் கோபப்படுகிறாரோ என்று. ஆனால் கமலாம்மாவோ சீதாவை பரிதாபத்தோடு நோக்கினாள். பாவம் இந்த சின்ன பிள்ளை ஒரு பெண்ணால் முடியும் என்ற தன்னம்பிக்கையை இழக்க நேரிடும் போது இவளின் மனநிலை. . . . . ? ஆம் அனுபவப்பட்ட பெண்மைக்கு கர்வப்பட தெரியாது. மனித நேயத்துடன் நல்ல உழைப்பு இருந்த போதும் அதையும் மீறி வரும் உயர்வு, தாழ்வு, வீழ்ச்சி, தாழ்ச்சி, வாழ்கையில் வரும் மேடு பள்ளங்கள் அணைத்தும் விதியின் படி என்று நினைத்து மனம் தளராமல் பகுத்தறிவோடு செயல்படும் ஒரு பெண்ணை பார்த்து அடுத்தவர்கள் கூறவேண்டும் ஒரு பெண்ணால் முடியாதது எதுவுமே இல்லையென்று. அப்பேற்பட்ட பெண்மை வாழ்க வளமுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =