சிறு கதை 🙂 சிறு துளி 5

ஒரு அம்மா அப்பா இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். மூத்த பிள்ளை மகன், இளையப்பிள்ளை மகள். இந்த ஆண் பிள்ளையோ படித்து முடித்து விட்டு வேலைத்தேடிக்கொண்டிருக்கிறார். இக்குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை என்பது குறிப்பிடும் அளவிற்கு இல்லை. ஒரு நாள் தன் தாய் தந்தையிடம் கூறுகிறான் தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும் அப்பெண்ணும் இவரை விரும்புவதாகவும் தன் விருப்பத்தை தெரிவிக்கின்றான். இதைக் கேட்ட பெற்றோர்கள் திடுக்கிட்டு பல வாக்குவாதத்திற்கு பிறகு தங்களின் மறுப்பை தெரிவிக்கிறார்கள் பெற்றோர்கள். சில வாரங்களுக்கு பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறக்கேட்கிறார்கள் இவர்களின் மகனுக்கும் அந்த விருப்பப்பட்ட பெண்ணிற்கும் திருமணம் முடிந்து விட்டதாகவும் அந்த திருமணத்தை அவனின் நண்பர்கள் எல்லாம் இணைந்து நடத்தி வைத்ததாகவும் கூறுகிறார்கள். இங்கு பெற்றோர்களின் மனநிலையை விட காதலுக்கு மரியாதை தானே அதுவும் நண்பர்களால் இணைத்து வைத்த திருமணம் தானே போற்றப்பட வேண்டியது. ஆறுமாதத்திற்கு பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள் உங்க பிள்ளைக்கு ஏதோ விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்களாமென்று. இதைக் கேட்ட அப்பாவோ தன் மனைவியிடம் இதைப்பற்றி கூறாமல் ஏனென்றால் பெற்றவள் அல்லவா? அவள் தாங்க மாட்டாள் என்று நினைத்து தான் மட்டும் மருத்துவமனையை நோக்கி செல்கிறார். மருத்துவமனையில் தன் மகனிருக்கும் அறையை கண்டு பிடித்து விட்டார். அறைக்குள் நுழையும் போதே தன் மகனைப் பார்க்கிறார் அங்கே அத்துணை நண்பர்களின் கைகளும் மகனின் மேல் உள்ளது. இவரைக்கண்டவுடன் அத்துணை நண்பர்களின் கைகளும் தன் மகனை விட்டு விலகி ஒரு அடி தொலைவு விலகி இடைவெளி கொடுத்தனர். அந்த அப்பாவோ தன் மகனை நெருங்கி அவனின் தலையை தன் நெஞ்சோடு அணைத்து அப்பா இருக்கிறேன் கலங்காதே என்கிறார் கண்ணீரின்றி தன் உள் மன தாக்கத்துடன். இதுவும் உண்மை நட்பின் அடையாளமல்லவா? ஒவ்வொருவரின் முதல் நட்பும் தந்தையிடமிருந்து பிறந்தது தான். அந்த முதல் நட்பை பேணிக்காத்து இப்பூவுலகில் படரவிடுங்கள் நண்பர்களே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =