பெண்மை 7

பெண்ணுரிமை பெண்ணுரிமை என்கிறோமே அது என்னங்க. ஒரு பெண்ணின் குழந்தை பருவத்திலிருந்து திருமணமாகும் வரை அம்மா அப்பா கொடுக்கும் உரிமைகள் தான்ங்க ஒவ்வொரு பெண்ணின் அடிப்படை பெண்ணுரிமை சட்டங்கள். இந்த அடித்தளம் சக்தி வாய்ந்ததாகவும், அப்பெண்ணிற்கு திருமணமான உடன் தன் கணவனும் அவனுடைய தாய் தந்தையும் கொடுக்கும் பெண்ணுரிமை தாங்க வாழ்க்கை எனும் பாதையின் அஸ்திவாரம். இங்கே பிறந்த வீட்டின் பெண்ணுரிமை சட்டத்தில் பிழைகள் இருப்பினும் அல்லது புகுந்த வீட்டின் பெண்ணுரிமை சட்டத்தில் பிழைகள் இருப்பினும் அங்கே பெண்ணானவளின் உரிமை பாதிக்கப்படுகிறது மற்றும் மீடியாக்களிலும் பேசப்படுகிறது பெண்ணை குற்றவாளியாக்கி. அடிக்கடி நான் கூறுவது பெண்ணென்பவள் வசப்படக்கூடியவள். அதுவும் எளிதில் வசப்படக்கூடியவள். பெண் பிள்ளையென்றாலும் ஆண் பிள்ளை என்றாலும் ஒரே மாதிரியான தைரியத்துடன் வளர்க்க நினைக்கும் பெற்றோர்கள் ஏன் அவர்களுக்கு வசப்படாத குணத்தை சொல்லிக்கொடுக்க மறக்கிறீர்கள்.அரசாங்கம் பெண்களுக்கு கொடுத்த சட்டம் பெண்ணென்பவள் யாருடைய சொத்துமல்ல. அவளுக்கும் தன்னுரிமை உண்டு ஆண்களை போல என நமக்கு பாதுகாப்பில்லா ஒரு சட்டம் கொடுத்துள்ளது. ஆம் இதை நமக்கு எங்ஙனம் பாதுகாப்பான சட்டமென கூறமுடியும். ஒரு செய்தியானது ஒரு கணவன் மனைவி அவர்களுக்கு ஒரு சிறிய குழந்தை. மூவரும் சொந்த ஊருக்கு சென்றார்கள். கணவன் வேலையின் நிமித்தமாக தன் மனைவியையும் குழந்தையையும் அங்கேயே விட்டுட்டு வேற ஊருக்கு வேலைக்கு சென்றதாகவும் அத்தருணத்தில் அப்பெண் வேறொருவனுடன் தனி அறை எடுத்து தங்கி இருந்ததாகவும் அவர்களின் சந்தோஷத்திற்கு அந்த குழந்தை ஒரு தடையாக இருந்ததால் சூடு வைத்ததாகவும், அப்பெண்ணை கைது செய்துள்ளதாகவும் டிவியில் செய்திகள் அப்பெண்ணின் புகைப்படத்துடன். ஒரு பக்கம் பார்த்தால் அச்சிறு குழந்தையின் சூட்டு தழும்புகள் மறுபக்கம் அப்பெண்ணின் புகைப்படம் ஆனால் அந்த ஆண் மகனின் புகைப்படம் வெளியிடவில்லை. அப்பெண்ணிற்கு அரசாங்கம் தண்டனை கொடுத்தது. இங்கே எதற்காக தண்டனை என்றால் அக் குழந்தைக்கு சூடுவைத்ததற்காக. ஏனென்றால் அரசாங்க சட்டத்தின்படி பெண் விரும்பினால் ஆணைப்போலவே யாருடன் வேண்டுமானாலும் தொடர்பு வைத்துக்கொள்ளலாம். எனவே இங்கு அவளுடைய குற்றம் கள்ளத்தொடர்புக்கல்ல. ஆனால் அந்த பெண்ணின் தாய் தந்தை கொடுத்த பெண்ணுரிமை சட்டத்தின் கீழும், அவள் கணவன் கொடுத்த பெண்ணுரிமை சட்டத்தின் கீழும் குற்றம் குற்றம்தானே. இங்கே கொஞ்சம் அப்பெண்ணின் மனதை அலசிப்பார்க்க விரும்புகிறேன். அதிலிருந்து ஒரு சிறு வழி கிடைக்கும் அவ்வழியை எத்தனையோ பெண்கள் கையாளக்கூடும் என நினைக்கின்றேன். ஒரு திருமணமாகிய பெண் தன் சிறு குழந்தையுடன் தன் கணவனல்லாத வேறொரு ஆணை ஒரு தனி அறையில் சந்திக்கின்றாள் என்றால் அவளுக்கு அந்த ஆண் மகன் எவ்வளவு தைரியத்தை கொடுத்திருக்க வேண்டுமென்பதை நினைத்து பாருங்கள். அந்த தைரியம் அளவுக்கடந்த அன்பாகவோ அல்லது அவளுக்கு கிடைக்காத அன்பாகவோ இருந்திருக்கலாம். எது எப்படியாக இருந்தாலும் பாதிக்கபடுவது பெண் மட்டுமே. ஒரு பெண் திருமணமானவள் என்று தெரிந்த பின்பும் ஒருவன் அவள் மீது நாட்டமோ அல்லது ஆசையோ கொள்கிறான் என்றால் அதற்கு பெயர் அளவுகடந்த பாசமல்ல வெறும் மோகம்தான். கவனியுங்கள் இங்கே அந்த பெண்ணின் புகைப்படமும், அக்குழந்தையின் புகைப்படமும் டிவியில் ஒளிபரப்பானது. இனி உன் நிலை என்ன? அந்த ஆணின் புகைப்படம் காட்டப்படவில்லை. அவன் இந்த சம்பவத்திற்கு அடுத்து அடுத்த தவறு செய்யமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம் அல்லது உன் நிலை இப்படி அம்பலமாகிவிட்டதே என்று ஊரறிய உன்னை திருமணம் முடிப்பானா? இதற்கு முடிவும் சிந்திக்கும் திறனும் ஒவ்வொரு பெண்ணின் பகுத்தறிவு திறனில் உள்ளது. பட்டுபுடவையாக இருந்தாலும் அதை அடிக்கடி மடிப்பு மாற்றி வைக்கின்றோம் மடித்த இடம் கிழிந்து விடக்கூடாதென்பதற்காக. புது புத்தகத்தைக் கண்டதும் புரட்டிப் புரட்டி பார்க்கிறோம் படித்து புரியாவிட்டாலும் தேர்ச்சிப்பெற. இவ்வாறிருக்க ஏன் வாழ்க்கையில் தடம்மாறும் போது பெண்ணின் இழப்பை புரட்டிப் பார்க்க மறக்கிறோம். உண்மை புலப்படும் போது தவறு செய்து விட்டோமே என்று மனமுடைந்து மனப்போராட்டத்தில் கசங்கிய பிறகு தன் வாழ்வை விடியாத பொழுதாக நினைத்து நம் இயலாமையை விதையாக நடுகிறோம். இதைக்காணும் அடுத்த தலைமுறையும் இந்த இயலாமையையே அவர்களுக்கு முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள நாமே வழிவகுக்க கூடாது. தன் இயலாமையிலும் தன்னம்பிக்கையுடனும், மனித நேயத்துடன் பெண்மையைக் காத்து வாழ்ந்தோமேயானால் ஒவ்வொரு பெண்ணும் பார்போற்றும் வீரதமிழச்சி தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − seven =