பெண்மை 6

இழந்தேன் இழந்தேன் அணைத்தும் இழந்தேன் வழிகேட்டின் உச்சத்தில் திரிந்தேன், உண்மையை மறந்தேன், பொய்யை நிறைத்தேன் மற்றும் நினைத்தேன், பாதையின் முடிவில் முட்டுச்சந்தை கண்டு முடிவில் நின்றேன் தனிமரமாக என கூறும் பெண்ணின் கதையும் உண்டு, ஆணின் கதையும் உண்டு. ஆனால் அதில் இழப்பு பெண்களுக்கே அதிக அளவு என்பதை நினைக்க மறக்கக்கூடாது. ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு செல்கிறாள். அங்கு தன் கணவனின் தகாத செயல்களினால் மிகவும் பாதிக்கப்படுகிறாள் திருத்தவும் முயல்கிறாள் அவளால் முடியவில்ல. பயனில்லை என்ற முடிவுக்கு வரும் போது கணவரின் பெற்றோர்களிடம் கூறுகிறாள் திருந்துவார்கள் என்ற எண்ணத்தில். ஆனால் அவர்களோ கூறுகிறார்கள் என் மகன் ஆண் பிள்ளை அப்படிதான் இருப்பான் என்று. அப்பெண்ணின் பெற்றோர்களையும் வீட்டிற்கு வரவிடுவதில்லை தன் கணவன். இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுக்கிறாள். இங்கே பாருங்கள் அந்த பெண் கல்வியை கற்றது அறிவிற்காக, வேலையை ஏற்றது குடும்பத்தின் நலவுக்காக, பிள்ளையைப் பெற்றது தாய்மை எனும் சிம்மாசனத்திற்காக. ஆனால் எங்கே இருக்கிறது அல்லது எங்கிருந்து கிடைக்கும் அன்பு, அரவணைப்பு, ஆறுதல், பாசம் மற்றும் பாதுகாப்பு. இவை அனைத்தையும் மற்றவர்களுக்கு கொடுக்கத்தான் முடியும் – விலை கொடுத்துக்கூட வாங்க முடியாது. இந்த குடும்பத்தில் தவறு செய்தவன் ஆண் ஆனால் தனிமரமாக நிற்பது அந்த பெண் தான். ஒரு வேளை கால சூழலின் காரணத்தால் அவன் திருந்தினாலும் – அவன் திருந்தி அவன் மனைவியை காணும் போது ஒருவேளை மனைவி உயிருடனே இருக்க மாட்டாள் அல்லது அவளுக்கு முதுமையே எட்டியிருக்கும். இன்று நீ திருந்தி என்ன பயன். இழந்த சந்தோஷங்களும், போன இளமையும் அவளுக்கு கிடைக்குமா? அதனால் தான் சந்தோஷமென்பது நம் கையில் உள்ளது என்கிறார்கள். சந்தோஷம் என்பது என் கையில் இருக்கிறது என யாரும் கூற கேட்பதில்லை. எனவே தான் நன்கு பக்குவமடைந்த பிறகு பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதே சிறந்ததொரு வழி வகுக்கும். அப்போது தான் நல்ல குடும்பத்தையும், பெற்றோர்களின் பாதுகாப்பையும், நல்ல குழந்தை வளர்ப்பையும் காண முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published.

six − 1 =