பெண்மை 3

பிறந்த உடனேயே பெண் குழந்தைகளுக்கு கல்லிப்பால் ஊற்றி கொன்ற காலம் போய் அந்த கொடுமையிலிருந்து காப்பாற்ற பட்ட அந்த பெண்ணினமே தன் குழந்தைகளை கொள்ளும் காலமாக மாறியுள்ளது. சூழ்நிலை எதுவாக இருந்தாலும் பெண்கள் எப்போதும் சிந்தித்து பொருமையுடன் திடமான முடிவெடுக்க கற்றுக் கொள்ள வேண்டாமா? ஏனென்றால் எப்போதும் இழப்பு பெண்ணிற்கு மட்டும் தான் அதிக அளவில். பெண்கள் எளிதில் வசப்படக்கூடியவள் மற்றும் இளகிய மனம் உடையவள். இவை இரண்டையும் களைய வேண்டும் நம் பெண்மையைக் காக்க. ஆம் ஒரு கணவன் மனைவி இரண்டு குழந்தைகள். அந்த மனைவிக்கும் ஆணுக்கும் தவறான தொடர்பு அதனால் அந்த பெண் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டதாக செய்திகள். சட்டத்திற்கு குற்றவாளியும் தண்டனையும் மட்டுமே தெரியும். ஏனென்றால் சூழ்நிலையை காட்டி குற்றவாளியை தண்டிக்காமல் விட்டால் குற்றங்கள் அதிகரித்து கொண்டே செல்லும். ஆனால் இங்கு குற்றம் செய்வதற்கு முன்பே அந்த பெண் சூழ்நிலையை பொருமையுடன் – வசப்படக்கூடிய மனநிலையையும் தன் இளகிய மன நிலையையும் நீக்கி யோசித்திருந்தால் அந்த இரண்டு குழந்தைகளும் இறந்திருக்காது தானும் சிறையில் இருந்திருக்க மாட்டாள். தன் கருவறையில் உயிரைக்காக்கும் பெண்ணே உயிரை எடுக்க துணியலாமா? திருமணமாகிய அல்லது திருமணமாகாத பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டியது எந்த ஆணாவது உங்களை வசப்படுத்தும் அளவிற்கு உங்களிடம் நடந்துக்கொண்டால் அவ்விதமான சந்தர்ப்பங்களை விட்டு விலகி தன் பெற்றோர்களின் உதவியை நாட கற்றுக் கொள்ளுங்கள். பெண்களினால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியும். ஆனால் ஆண்கள் பாவம் அவர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம். அவ்வாறிருக்க அவர்களுக்கு முன்னால் நாம் கவரும் அளவில் உடை அணிந்தோ அல்லது அவர்களை கவரும் அளவிற்கு உரையாடிக் கொண்டிருந்தால் எந்த ஆணுக்கும் உன் வயது தெரியாது, நீ திருமணம் ஆனவளா? அல்லது திருமணம் ஆகாதவளா? என்று தெரியாது மற்றும் உனக்கு குடும்பம் என்று ஒன்றுள்ளது என்பதை அவன் மறந்துவிடுவான் ஆனால் உனக்கு குடும்பம் என்று ஒன்றுள்ளது என்ற பயத்துடன், பிரச்சனை என்று ஒன்று வந்தால் யாருமே நமக்கு துணை வரமாட்டார்கள் என்ற அச்சத்தோடு வாழ கற்று கொள்ள வேண்டும். குழந்தைகளை கொன்றால் தான் உன்னுடன் வாழ்வான் என்றால் அவனிடம் எங்கே இருக்கிறது நல்ல மனம் அல்லது நல்ல குணம். பெண்மை என்பது என்னுடையது. என்னுடைய பெண்மையை என்னால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் வாழத்தெரிந்தவள் தான் பெண். இல்லையென்றால் வீண்.

Leave a Reply

Your email address will not be published.

19 − 8 =