பெற்றோரின் பெருமை 6

நாம் மழலையாக இருந்த போது நம் மொளன மொழியைக்கண்டு மருத்துவம் பயிலாமலே மருத்துவ நிவாரணம் கொடுத்தவர்கள் மற்றும் கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் பெற்றோர்கள். அதே பெற்றோர்கள் முதுமை அடைந்து வாய் திறந்து தங்கள் உடல் நலக்குறைவை கூறும் போது அதை பெரிதாக நினைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை அவர்கள் எப்போதும் இப்படிதான் ஏதாவது புலம்பிக்கிட்டே இருப்பார்கள் என்று அவர்களின் முன்னிலையில் கூறாமல் இருக்கலாம் அல்லவா? இவ்வாறு பெற்றோர்களை ஒரு பொருட்டாக நினைத்து தமது நேரத்தை செலவழிக்காத பிள்ளைகளுக்கு இக்கூற்றை சமர்பிக்கின்றேன். அன்பே தாயென்போம் அரவணைப்பே தந்தையென்போம். இதற்காக ஒரு நினைவுக்கூறுதல் : அம்மா அப்பாவிற்கு ஒரு குழந்தை பிறந்து விட்டது. மருத்துவ மணையில் அம்மாவும் குழந்தையும் இருக்கிறார்கள். அந்த அப்பா செல்கிறார் மனைவியையும் குழந்தையையும் காண. அவர்களைக் கண்டதும் அவரின் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீருடன் ஒரு வகை ஒளி தரும் புன்னகையும் வெளிப்படும். அந்த ஒரு துளி கண்ணீர் தன் மனைவி மறுபடியும் உயிர் பெற்று மறுபிறவி எடுத்துள்ளாள் என்பதற்காகவும், அந்த ஒரு வகை ஒளி தரும் புன்னகையானது ஒரு புது வரவிற்காகவும். சிலரிடம் பணமிருக்காது டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஆனால் அந்த அம்மாவோ தன் கழுத்தில் இருக்கும் கடைசி சங்கிலியை கழற்றி தன் கணவன் கையில் கொடுப்பாள் புன்னகையுடன். பிறந்த இந்த பொக்கிஷத்தை விட இந்த தங்க சங்கிலி பெரிதல்ல என்பாள். எவ்வளவு இன்பங்கள், துன்பங்கள், கஷ்ட்டங்கள், நஷ்ட்டங்கள் வந்தாலும் தன் பிள்ளைகளுக்காக அணைத்தையும் மறப்பார்கள் , மறைப்பார்கள், மறுப்பார்கள், சிலவற்றை இழக்கவும் செய்வார்கள். கருதறித்ததிலிருந்து பெற்றெடுக்கும் வரை அம்மாவும் அப்பாவும் நன்றாக தூங்கி இருக்க மாட்டார்கள். ஆம் அந்த சமயத்தில் அம்மாக்கள் வாந்தி எடுத்துக்கிட்டே இருப்பார்கள் அதிலும் ஒரு சிலரால் தண்ணீர் கூட குடிக்க முடியாது. ஒரு நாள் விட்டு மறு நாள் என குளுக்கோஸ் நரம்பு மூலமாக மருத்துவமனைக்கு சென்று எடுத்துக்கொள்வார்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தை வயிற்றில் சுழலுவது தெரிகிறதா? என்று கண்காணிக்க வேண்டும். அதனால் தூங்கி விட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சம் அம்மாவிற்கு. தன் மனைவி அசதியில் தூங்கிவிட்டால் குழந்தைக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற அச்சம் அந்த அப்பாவிற்கு. அதனால் தான் அம்மா நம்மை வயிற்றில் சுமப்பவள், அப்பாவோ நம்மை நெஞ்சில் சுமப்பவர். பிறந்த பிறகும் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் தூக்கம் கிடையாது பிறந்ததிலிருந்து ஒரு வயது வரை. ஆம் அப்பருவத்தில் குழந்தைக்கு அழதான் தெரியும். எது வேண்டும் என்று கேட்க தெரியாது. என்ன கடிக்கிறது, என்ன வலிக்கிறது என்று சொல்லத்தெரியாது. அழுகையும், சிரிப்பும் கலந்த மொளன மொழியை வைத்து குழந்தைக்கு என்னவாக இருக்கும் என அறியும் முதல் மருத்துவர் அம்மாவும் அப்பாவும் தான். தாயோ – தாலாட்டு படிப்பாள் தலையாட்டி ரசிப்பாள். தந்தையோ – கைக்கொட்டி சிரிப்பான் தங்கமே என அணைப்பான். இவ்வாறான சூழ்நிலையில் வாழ்ந்த அதாவது நாம் கருவில் இருந்ததிலிருந்து ஒரு வயது வரை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட அதாவது 10 மாதத்துடன் ஒரு வருடத்திற்கான 12 மாதத்தையும் கூட்டினால் மொத்தம் 22 மாதங்கள். இந்த 22 மாதங்களுக்கு நிகராக நாம் எதையுமே நம் பெற்றோர்களுக்கு கொடுக்க முடியாது. இதுதான் உங்களின் கணக்குப்படி உங்களுக்கு சேரவேண்டியது என்று நம்மால் பிரித்து கொடுக்க முடியாது. ஏனென்றால் அவை அனைத்தும் நம் பெற்றோர்களின் உணர்வு தூண்டலினால் வந்த உணர்ச்சியின் ஊற்றல்லவா? அதற்கு நிகர் பிள்ளைகளாகிய நம்முடைய அன்பும், அரவணைப்புமே ஆகும். கஷ்ட்டங்களையும், நஷ்ட்டங்களையும் எங்களுக்காக அனுபவியுங்கள் என்று உங்களிடம் கேட்கமாட்டார்கள். அதை விரும்பவும் மாட்டார்கள். இந்த 22 மாதங்களை மட்டும் நான் குறிப்பிட்டதற்கு காரணம் இவ்வுலகில் குறைகளும், கவலைகளும் இல்லாத மனிதர்கள் யாரும் கிடையாது. இவைகளுக்கு காரணம் பொதுவாக கால சூழலும், விதியுமே ஆகும். அதனால் அக் குழந்தை வளரும் போது குடும்பத்தில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். அதற்காக வேண்டி அந்த குழந்தை பெரியவனாகிய பிறகு தன் பெற்றோர்களை புறகணிப்பது தவறானது. ஏனென்றால் அந்த 22 மாதங்களில் அவர்கள் பட்ட கஷ்டங்களுக்கு பிறகு தான் இன்று இந்த நிலைக்கு நாம் வந்திருக்கிறோம் என்பதை பிள்ளைகளாகிய நாம் நினைக்க வேண்டும். இங்கே மற்றுமொன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என்னவென்றால் சிலர் நினைக்கலாம் எங்களுக்கும் ஒரு குழந்தை வரும் போது நாங்களும் தானே அந்த 22 மாதத்தின் கஷ்டங்களை அனுபவிப்போமென்று. ஆம் அதுதான் வாழையடி வாழை என்பதற்கான நினைவுக்கூர்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 16 =