பெற்றோரின் பெருமை 5

பெற்றோரை இழந்தவர்கள் அனாதைகள் என்றேன். இங்கே அனாதைகள் என்ற வார்த்தை உங்களில் பலரை காயப்படுத்திருந்தால் அதை பொருத்துக்கொள்ளுங்கள் தயவுக்கூர்ந்து. தாய் தந்தை இல்லாதவர்கள் எத்தனையோ பேர் நம்மில் இருக்கலாம், மனம் வலிக்கவும் செய்யலாம். அதைவிட எத்தனையோ பேருக்கு பெற்றோர்கள் இருந்தும் அவர்கள் முதியோர் இல்லத்தில் இருப்பதை காணும் போதும், அவர்களின் மனவலியை கண்ணீராக கொட்டுவதை பார்க்கும் போதும், என் பிள்ளைகள் எங்களை பார்க்க கூட வரவில்லை என்று கூற கேட்கும் போதும் நம்மில் பலரின் மனங்களில் ஏற்படும் வலியானது இந்த “அனாதைகள் “என்ற வார்த்தைக்கு ஈடாகாது. பெற்றோர்களை இழந்த பிறகு தான் நாம் அனாதை ஆகிறோம். ஆனால் பிள்ளைகள் உயிருடன் இருந்தே பெற்றோர்கள் அனாதைகளாக விடுதிகளில் இருக்கிறார்கள். அத்தகைய பெற்றோர்களின் மனவலிமையை ஊக்குவிப்பதற்காகவும் அதாவது அத்தகையப் பெற்றோர்கள் மனதிடத்துடன் வாழ்வதற்காகவும், பெற்றால் தான் பிள்ளையா? என்பது போல் பெற்றால் தான் தாய் தந்தையா? என நம்மில் நல் உள்ளம் கொண்ட அணைவரும் முதியோர் இல்லத்தில் உள்ள பெற்றோர்களுக்கு அடைக்களம் கொடுப்போமே ஆனால் நம்மில் யாருமே அனாதைகள் அல்ல என்பதை தெளிவுப்படுத்தவே “அனாதைகள் “என்று எடுத்துரைத்தேன்.

3 thoughts on “பெற்றோரின் பெருமை 5”

  1. I һave Ƅeen browsiҝng online more than 2 hours today, yet
    I never found any interesting article like yours. It’ѕ
    pretty wortyh enough for me. In mmy view, if all site owners and bl᧐ggers
    made good ϲontent as you did, the weeb wilⅼ be much more useful than ever before.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − fourteen =