பெண்மை 5

பிள்ளைகள் கல்லூரி படிப்பை முடிக்கும் போதே திருமண ஆசையும் வளர்ந்து விடுகிறது. முழுமையாக பக்குவமடையாத வயது அதனால் வேலைக்கு செல்வதற்கு முன்பே சில பேர் திருமணத்தை முடித்து விடுகிறார்கள். அதனால் பொருளாதார ரீதியில் பலவீனமாகவும், வாழ்க்கை நடைமுறையில் தடம்மாறி செல்லவும் சூழ்நிலைகள் வழிவகுக்கிறது. சில பிள்ளைகள் கல்லூரி முடித்த பிறகு நல்ல வேலைக்காக முயற்சி செய்துக்கொண்டுருப்பார்கள். அந்த தருணத்தில் அவர்களுக்கு தேவை ஒரு பெண்ணின் ஆதரவு அதாவது அவனுடைய உணர்வை வெளிப்படுத்த அங்கே அவனுக்கு வயது ஒரு தடையாக இருக்காது. உதாரணமாக ஒரு சம்பவம் – ஒரு அம்மா வயது 45. அவரின் மகனும் பக்கத்து வீட்டு பிள்ளையும் நண்பர்கள் சிறு வயதிலிருந்தே அதாவது அவர்களின் ஒரு வயதிலிருந்தே. அந்த அம்மாவோ அவர்கள் இருவரிடமும் மிகுந்த பாசத்துடன் விளையாடுபவர் வயது வித்தியாசமின்றி. அந்த அம்மாவுக்கு கணவன் இல்லை பத்து வருடமாக. அதை யோசிக்கக்கூட அந்த அம்மாவிற்கு நேரமில்லை ஏனென்றால் அந்த அம்மாவின் உழைப்பினால் தான் அந்த குடும்பம் நல்ல முறையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த பக்கத்து வீட்டு பையன் கல்லூரி முடித்து விட்டு ஒரு நல்ல வேலைக்காக வீட்டில் இருக்கிறான். ஒரு நாள் அந்த 45 வயதான அம்மாவிற்கு watsup ல் message அனுப்புகிறான் அந்த பையன் “நீங்க uncle இல்லாமல் தனியாக இருப்பதால் உங்களின் மன அழுத்தம் அதிகமாகி இருக்கும் இல்லைன்னா நீங்க யாரிடமாவது sex வைத்துக் கொண்டால் உங்களின் மன அழுத்தம் குறைந்து விடும் மற்றும் sex என்பது தவறான ஒன்று  அல்ல என்று எழுதியிருந்தது ” அதற்கு அந்த அம்மாவிற்கு வார்த்தைகள் இல்லை அவனுக்கு கூற இருந்தாலும் அந்த பையனுக்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார். இருப்பினும் மனதளவில் காயமடைந்துள்ளார் இந்த சந்தர்ப்ப சூழ்நிலையை ஏற்படுத்தியதற்கு தானே காரணமென்று. அதனால் தான் பெண்கள் எப்போதும் புரிந்தவர்களாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் ஆண் பிள்ளைகளிடம். பெண்களாகிய நமக்கு வயதாகி விட்டது என்று தன் பிள்ளைகளை தவிர யாருடனும் குடும்ப கதைகளையோ, கவலைகளையோ அல்லது சமமாக அமர்ந்து விளையாடவோ கூடாது. நமது மனம் தூய்மையென்பதால் அந்த பிள்ளையின் மனமும் தூய்மை என்பதற்கு யாரும் உத்தரவாதம் கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =