பெண்மை 4

ஒவ்வொருவரின் வயது மற்றும் சுற்றுபுற சூழ்நிலை யுமே எல்லாவற்றிற்கும் முதல் காரணம். 12 வயதிலிருந்தே எல்லோருக்கும் உணர்ச்சி தூண்டல் என்று ஒன்று ஆரம்பித்து விடுகிறது. 12 வயது என்பது Adult list – ன் ஆரம்பக்கட்டமாகும். அவர்கள் எப்போதும் busy ஆக இருக்கும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொடுப்பது பெற்றோர்களின் முக்கிய பங்காகும். அதே சமயத்தில் அவர்கள் Busy ஆக என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கண்காணிப்பது மிகவும் குறிப்பிட தக்க பங்காகும் பெற்றோர்களுக்கு. குழந்தைகளுக்கு விவரம் தெரியும் வயதிலிருந்தே நம் குடும்பதத்தை சார்ந்தவரல்லாத எவரேனும் தங்களை தொட்டு பேசவோ அணைத்து கொஞ்சவோ அனுமதிக்க கூடாது என்று கற்றுத்தர வேண்டும். உதாரணமாக ஒரு சம்பவம் : ஒரு அம்மா அப்பா அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள். அதில் மூன்றாவது குழந்தையின் வயது 8. மிகவும் அழகாக இருக்குமாம். அம்மா அப்பா இருவரும் வேலைக்கு செல்பவர்கள். அவர்களின் தூரத்து சொந்தமான ஒரு பையன் வயது 18 அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமாக இருந்ததாம். எப்போதும் அந்த பையன் 8 வயதான சின்ன பிள்ளையிடம் மிகவும் நெருக்கமாக விளையாடிக் கொண்டிருப்பானாம். திடீரென இந்த சின்ன பிள்ளை அந்த பையனை பார்த்தாலே பயப்பிட ஆரம்பித்திருக்கிறான். சில நாட்கள் கழித்து குழந்தை அழ துடங்கி இருக்கிறது எனக்கு ஆய் பண்ணும் இடத்தில் வலிக்கிறது என்று. அந்த அம்மா அந்த இடத்தை பார்த்தால் நன்றாக புண்ணாகி இருந்திருக்கிறது. பிறகு குழந்தையை அதட்டி அடித்து கேட்டப்பிறகு தான் அந்த குழந்தை கூறியிருக்கிறது அம்மா அந்த அண்ணா தான் இப்படி பண்ணாங்க. உங்ககிட்ட சொன்னா அடிப்பேன்னு சொன்னாங்கன்னு அழுதிருக்கிறது. ஒரு ஆண் குழந்தைக்கே இந்த நிலை என்றால் பெண் குழந்தைகளை நினைத்துப்பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 7 =