பெண்மை 2

ஒவ்வொருவரின் மனங்களும் குரங்கு போல் தாவிக்கொண்டே இருக்கும் மனங்கள் மட்டுமல்ல வார்த்தைகளும் தான் நேரத்திற்கு நேரம், நாட்களுக்கு நாட்கள், வாரத்திற்கு வாரம், மாதத்திற்கு மாதம், வருடத்திற்கு வருடம் மாறுபட்டு கொண்டே இருக்கும். அதுவே நம் வாழ்க்கையில் நிலையான நிம்மதி இல்லாமலிருப்பதற்கு முக்கிய காரணம். உடலில் வலிமை உள்ள வரை மனதில் திடம் உண்டு. எப்போது உடலில் வலிமை இழக்க ஆரம்பிக்கிறதோ அப்போதே மனதில் இருந்த தன்னம்பிக்கை குறைய ஆரம்பித்து விடும். தன்னம்பிக்கை குறைய ஆரம்பிக்கும் போது தான் நாம் கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ செய்த தவறுகள் தண்டனையாக மாறி மன அழுத்தத்திற்கு ஆளாகி நிரந்தர நோயாளியாக வீழ்ந்து விடுவோம். ஒரு கணவன் மனைவிக்கோ அல்லது ஒரு மனைவி கணவனுக்கோ துரோகம் செய்வதால் அடையும் சந்தோஷமெல்லாம் உடல் வலிமையும் மன வலிமையும் உள்ள வரைதான். அவை இழந்த பிறகு நாம் அணைவரும் அழுகிய உடலுக்கு உயிரிருப்பது போல் தான். நம்முடைய அழுகிய உடலை நம் கண்களாலே காணும் போது எவ்வளவு அருவருப்பாக இருக்கும் என நினைத்தால் நம் இளம் வயதில் இவ்வாறான தவறுகளை செய்ய நினைக்கக் கூட மாட்டோம். நினைக்கும் போதே பூஞ்சோலையாக தென்படும் நினைவுகள் என்னத் தெரியுமா? திருமணமாகிய உடன் கணவன் மனைவிக்குள் உள்ள ஊடல் நிறைந்த சந்தோஷங்கள் இடையில் குழந்தைகளுடன் இணைந்த கலகலப்பு பிறகு முதுமை எட்டியதும் அதே கணவன் மனைவிக்குள் ஒத்துழைப்பு பரிமாற்றங்கள் ஆஹா!! இதை இழக்க யாருக்கு தான் மனம் வரும். ஒரு பெண்ணின் வெளிதோற்றத்தில் மயங்கிய ஆண் எத்தனையோ பேர் இருக்கலாம். அதே பெண்ணைக்கண்டு உங்களைப் போல் எத்தனையோ பேர் மயங்கி இருப்பார்கள் என நினைத்து பாருங்கள் பிறகு அவள் உங்களுக்கு அருவருப்பாக தென்படுவாள். அதேப்போல் எத்தனையோப் பெண்கள் சில ஆண்களிடம் மயங்கி இருப்பீர்கள். அப்போது நீங்கள் ஒரு நிமிடம் யோசித்து பார்க்க வேண்டாமா? இவ்வாறு இன்னும் எத்தனை பெண்களை இவன் மயக்கி இருக்கமாட்டானென்று. எப்பொழுதும் இழப்பு பெண்களுக்கு தான் அதிகம். எவ்வளவோ ஆண்கள் தவறு செய்வார்கள் ஆனால் அவைகள் எல்லாம் வெளி உலகம் காணாது. ஏனென்றால் அந்த கயவர்களின் மனைவிகளுக்கு தெரிந்ததெல்லாம் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பது தான். ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவாது என்பதை உணர மறுக்கிறார்கள். எவ்வளவோ விஞ்ஞானம் வளர்ந்தும் பெண்களாகிய நாம் மட்டும் மனவளர்ச்சியில் குன்றியே நிற்கிறோம். படிப்பறிவிலும், தொழில் திறனிலும் பெண்களாகிய நாம் ஆண்களுக்கு நிகராக இருக்கிறோம் ஆனால் மன வலிமையில் மட்டும் இன்னும் பின் தங்கியே இருப்பதால் தான் சில பெண்களின் தவறுகளையும், தண்டனைகளையும் நாம் தொலைகாட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் கானும் போது தலைகுனிந்து நிற்கிறோம். நம்மை கொள்ளப்போவது நம் அம்மாவே என பிறப்பதற்கு முன்பே அப் பிள்ளைகளுக்கு தெரிந்திருப்பின் உனக்கு பிள்ளையாக பிறந்து உனக்கு தாய் என்ற சிம்மாசனத்தைக் கொடுத்திருக்காதே. நாளைய சமுதாயம் அல்லவா அக்குழந்தைகள். ஒன்றை மட்டும் பெண்கள் மறக்கக்கூடாது “பெண்களால் உணர்வுகளை அடக்க முடியும் ” ஆனால் ஒரு சிலரின் பதில் அப்படி உணர்வுகளை அடக்கினால் மன அழுத்தம் ஏற்பட்டு இரத்த அழுத்தம் அதாவது BP அதிகமாகிவிடும் என்கிறார்கள். அவர்களுக்கு நான் கூறும் பதிலாவது Blood pressure க்கு மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மானக்கேடான செயல்களினால் குடும்பத்தையே இழக்க நேரிடுமே , பழிச்சொல்லுக்கு ஆளாவோமே, காலம் கடந்த பிறகு தவறு செய்து விட்டோமே என்ற மன அழுத்தத்தை சந்திக்க நேரிடுமே இதற்கெல்லாம் தீர்வு உண்டா? மன அமைதி கிடைக்குமா? இழந்தது இழந்ததுதான் பெண்மையைப் பொருத்தவரையில். இழந்த சொத்தை சம்பாதித்து விடலாம், இழந்த பொருளை மீட்டு விடலாம், ஏன் இழந்த சொந்தத்தை சேர்த்து விடலாம் ஆனால் இழந்த பெண்மையால் சீரழிவு மட்டுமே என்பதை பெண்களாகிய நாம் நம் மனதில் பதித்து விட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =