பெண்மை 1

தனக்கு தானே வட்டமிட்டு தானுண்டு தன் குடும்பமுண்டு என்று எண்ணாது வாழும் வண்ணத்துப் பூச்சி நான். நான் திட்டமிட்டு தீட்டிய வட்டத்தில் சிறகடித்துப் பறந்தாலும் சிறகொடிந்து வீழ்ந்தாலும் தன்னம்பிக்கை இழக்கா தமிழச்சி ஆகிய நான் என் அனுபவ கலவையை ஒன்றாக கலந்து பக்குவமாக முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பகுத்தறிவு இருந்தும் பக்குவப்படாத பெண்களுக்கு கொடுக்க முயல்கிறேன் பெண்மை எனும் தலைப்பின் கீழ். ஆம்

என்ன குறை உண்டு என் குலப்பெண்களுக்கு – அல்லது என்ன நிறை இல்லை என் குல மணிப்பெண்களுக்கு
பத்து மாதம் சுமந்ததால் பட்டம் பெற்றால் தாயென பத்தாம் நாளே கொன்று விட்டாள் அடுத்தவனின் பத்து விரல் சுகத்துக்காக பாவம் அந்த பிள்ளை உன்னை பார்க்கக்கூட இல்லை பாவி ஆகிய நீயோ பெண்களுக்கெல்லாம் தொல்லை.

நான் அடுத்தடுத்து கூறுவது பெண்கள் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் பலவீனமானவர்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கதான் செய்வார்கள். ஏன் பெண்களாகிய நாம் ஏமாறுபவர்களாக இருக்க வேண்டும். ஏன் நாம் ஏமாற்றுபவர்களுக்கு துணைப்போக வேண்டும். இன்றளவில் நாம் அடிக்கடி நடந்திடும் அல்லது எதிர் பார்க்கும் நிகழ்வுகள் என்பது பெற்ற பிள்ளைகளையே கொன்று விட்டு யாருடனோ ஓடிய பெண், தன் மனைவியை வேறொருவனுடன் கண்ட கணவன் மனைவியை வெட்டிக்கொன்றான், மனைவியே தன் கணவனைக் கொள்ள முயன்ற போது பிடிப்பட்டாள் இவ்வாறெல்லாம் நாம் தொலைகாட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் கானும் போது ஏன் நாமெல்லாம் பெண்ணாக பிறந்தோம் என நினைக்க தோணுகிறது. பத்து நிமிட சுகத்துக்காக பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையை பிணமாக்கி பார்ப்பதற்கு பதில் தானே தற்கொலை செய்துக்கொண்டு அந்த பச்ச மண்ணை உலகில் படரவிடலாமே எனக் கூற எனக்கு தோணுகிறது. ஆனால் தற்கொலையும் விடை அல்ல. இவ்வுலகிலுள்ள எவரும் உத்தமரும் அல்ல, எல்லோரும் தீயவரும் அல்ல. ஒவ்வொருவரின் வயது ,குடும்ப சூழ்நிலை,பொருளாதார சூழ்நிலை, சுற்றுப்புற சூழல், சந்தர்ப்ப சூழ்நிலை, பணிப்புரியும் இடத்தின் சூழ்நிலைக்கேற்ப பல தகாத அல்லது தேவை அற்ற அணுகு முறையின் காரணமாக மன பரிமாற்றம் ஏற்படுகிறது ஆணுக்கும் பெண்ணுக்கும். இவ்வாறான சூழ்நிலைகளில் ஆண்களும் பெண்களும் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பதை எனக்கு தெரிந்த உதாரணங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் உங்களிடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =