பெற்றோரின் பெருமை 3

திருமணமாகி இரண்டு மாதங்கள் தான் கழிந்திருக்கும் கோயில் கோயிலாக செல்வார்கள் பிள்ளை வரம் வேண்டுமென. ஏன் அவர்கள் தீர்மானித்தால் ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ குழந்தையின்றி சந்தோஷமாக வாழ முடியாதா அல்லது தெரியாதா? இதற்கு கிடைத்த பெற்றோர்களின் பதில்கள் எங்களுக்கு 25 வயதிற்குள் திருமணமாகியது உடனே என் மகள் அல்லது மகன் பிறந்ததால் தான் இன்று என்னுடைய 50 வயதில் பேரப்பிள்ளைகளை பார்க்க முடிந்தது. இந்த தன்னலமற்ற வாரிசு காப்பாளர்களின் பெருமையை எங்ஙனம் புகழ்வது. மேலும் அவர்கள் கூறுகிறார்கள் பிள்ளைகள் என்பவர்கள் ஆனந்தம், பேரப்பிள்ளைகள் என்பவர்கள் பேரானந்தம் என்று. இவ்வாறு தன் வாழ்நாட்கள் முழுவதையும் தன் பிள்ளைகளுக்கென எல்லாவற்றையும் இழப்பதில் மதியின்மையும் உண்டு. ஆனால் அவை அவர்களின் தன்னலமற்ற அறியாமை மட்டுமே ஆகும். அந்த பெற்றோரின் அறியாமையை தன் பிள்ளைகளுக்கு  உணரும் பக்குவம் வரும்போது அவை தேவையற்றவை என நினைத்து அதை அவர்களின் வாழ்க்கையில் தன்பிள்ளைகள் முறைப்படுத்தும் போது அவை அந்த பெற்றவர்களுக்கு தன் பிள்ளையின் சுயநலமாகத் தெரிகிறது.

பிறகு அதுவே பெற்றோர்களுக்கு மன அழுத்தமாக மாறி மனதளவில் தளர்ச்சிவுருவதோடு மட்டுமின்றி பிள்ளைகளின் மீது வைத்திருந்த நம்பிக்கையும் இழந்து விடுகிறார்கள். உடனே அவர்கள் புதிதாக வந்த மருமகன் அல்லது மருமகளால் தான் இந்த சுயநலம் தன் மகனுக்கு அல்லது மகளுக்கு வந்து விட்டதாக கூறுகிறார்கள். எது எப்படியாக இருந்தாலும் தன் வாழ்கையை முறைப்படுத்த தெரிந்த பிள்ளைகளுக்கு தனக்காக எல்லாவற்றையும் அறியாமையினால் இழந்த தன் பெற்றோர்களை அரவணைத்து பாதுகாப்பளிப்பது ஒவ்வொரு மகனின் அல்லது மகளின் கடமை அல்லவா? ஒருவர் எப்போது அனாதை என நினைக்கிறீர்கள்? நம்மிடம் உள்ள சொந்த பந்தங்கள், மனைவி, மக்கள், வீடு, சொத்துக்கள் இவை அனைத்தும் இல்லையென்றால் அல்ல. தாய் தந்தை இல்லாதவர்கள் அனைவருமே எவ்வளவு சொத்து சுகங்கள், கவுரவங்களோடு இருந்தாலும் அவர்கள் அனைவரும் அனாதைகள் தான். இதற்கு சிறிய உதாரணம் – தள்ளாடும் வயதினில் அம்மா அப்பா, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள். தீபாவளி பண்டிகை வந்து விட்டது ஓரிரு நாட்களில் கணவன் வீட்டிற்குள் நுழைந்தவுடன் சந்தோஷமாக கூறுகிறான் போனஸ் பணம் வந்து விட்டது என்று. உடனேயே அந்த இரண்டு குழந்தைகளும் தாவி குதிக்கிறது தன் தந்தையின் மீது இது  வேண்டும் அது வேண்டுமென்று. தன் மனைவியவள் கூறுகிறாள் எனக்கு இது வேண்டும் அது வேண்டுமென்று ஆனால் அவனின் வயதான தந்தையோ முனுமுனுக்கிறார் அந்த தாயிடம் பிள்ளைக்கு அந்த காப்பியை சூடுபண்ணி கொடுஎன்று. தன்னை தேவையற்றவர்களாக்கி கொண்டவர்கள் தான் பெற்றோர்கள். அப்போது மருமகள் நினைப்பாள் ஏன் நான் சூடுபண்ணி தரமாட்டேனா? நாம் சந்தோஷமாக பேசுவது பிடிக்காம தான் இப்படி செய்கிறார்கள் என நினைப்பாள் தன் அறியாமையால் ஆனால் உண்மை அதுவல்ல. பெற்றோர்களுக்கு தான் தெரியும் தன் பிள்ளையின் குடலின் ஈரத்தன்மையும் என்று கூறினால் அது மிகையாகா. எனவே தான் அவர்களை இழந்தவர்கள் அனைவரும் இவ்வுலகில் அனாதைகள் என்றேன்.

நன்றி…!

Leave a Reply

Your email address will not be published.

ten − 6 =