பெற்றோரின் பெருமை 1

“எல்லா புகழும் இறைவனுக்கே ” என கூறி கார் மேகம் சூழ்ந்தாலும் இடி மின்னல் ஒலித்தாலும், கதிரவன் சுட்டாலும், நிலவொளி ஆறுதல் கிடைத்தாலும், கால சூழ்நிலையின் மாற்றத்தால் மாற்றங்கள் வந்தாலும் தன்னிலை மாறாது விண்மீனை சுமந்தொளிரும் வானத்தை போன்றவர்கள் பெற்றோர்கள். அவர்களை மெருகேற்ற விளைகிறேன் என் தாய் தந்தை எனக்களித்த கல்வி செல்வத்தால். எல்லா பெற்றோர்களும் வானத்தை போன்றவர்கள். வானம் ஒன்று அதேப்போல் தான் எல்லா பெற்றோர்களின் மனங்களும் ஒன்றுதான். அதில் எந்த வித மாற்றுக்கருத்தும் புகுத்திட இயலாது. எனினும் வாழ்க்கை தரத்தின் சூழ்நிலைக்கேற்ப இழப்புகள், மனவேறுபாடுகள் , மன வருத்தங்கள், சிக்கலான சூழ்நிலைகள், தவிர்க்க முடியாத சூழ்நிலைகள், விதியின் விளையாட்டினால் வரும் தீராத நோய்கள் அதனால் ஏற்படும் மன உழைச்சல்கள் இவ்வாறான காரணங்களால் சில குறைபாடுகள் நம் பெற்றோர்களிடம் தென்படுவது இயற்கையின் எதிர்பார்ப்புகள் ஆனால் அவைகள் அவர்களின் குணத்தின் வெளிப்பாடல்ல. அவ்வாறு வெளிப்படும் குணத்தை அடுத்தவரின் முன்னிலையில் கூறி அவர்களை மேலு‌ம் மன அழுத்தத்திற்கு தள்ளப்படுவது தான் நம் போன்றவரின் குறைபாடுகள். தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பார்கள். ஆனால் நம்மில் எத்தனை பேர் நம் பெற்றோர்களை தோழர்களாக ஏற்றிருக்கிறோம். எத்தனையோ பிள்ளைகள் எனக்கு பாகப்பிரிவினை வேண்டுமென வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் எத்தனையோ பெற்றோர்கள் பாக பிரிவினையும் செய்து விட்டு என் பிள்ளை என்னை கவனிக்க மருத்துவிட்டான் என எந்த வழக்கு பதிவும் செய்யாமல் அனாதையாக முதியோர் இல்லத்தில் அமர்ந்திருக்கும் கனிந்த உள்ளங்களுக்கு இவ்வெழுத்தக்களை சமர்பிக்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 14 =