அனுபவம் 10

  • பெண்ணினமே! பெண்ணினமே! பெருந்துன்பமே உன் முன்னே பேரழிவாக வந்தாலும் புன்னகைக்க கற்றுக் கொள் கற்றுனர்ந்த செல்வத்தால். கதிரவனை போல் சுட்டாலும், களைப்பாற ஆறுதல் கிடைத்தாலும் புன்னகைக்க கற்றுக் கொள். பெரும் பழியே உன் மேல் வந்தாலும், பேராதறவே உனக்கு கிடைத்தாலும் புன்னகைக்க கற்றுக் கொள். புன்னகைக்க புன்னகைக்க என்றேனே அந்த புன்னகையில் தான் உங்களுடைய பொருமையும் உங்களுடைய விலைமதிப்பில்லா வெற்றியும் அடங்கி உள்ளது. ஒரு கணவன் மனைவியை பார்த்து நீ அழகாக இல்லை என்று உங்களை அலட்சியப்படுத்தினாலும் ஒரு புன்னகையை மட்டும் பொழிந்து விடுங்கள். ஏனென்றால் அதை உங்கள் மனதிலே போட்டு குடையும் போது உண்மையிலேயே உங்கள் உண்மை அழகில் குறைகள் வந்துவிடும். அன்று உங்கள் கணவர் உங்களை பிடித்தது என்று திருமணம் முடித்தவர் இன்று உங்களை அழகில்லை என்று கூறுகிறார். மறுபடியும் ஒரு நாள் கண்டிப்பாக அழகு என்று கூறுவார். அது வரை உங்களுக்கு பொருமை தான் வேண்டும். அந்த பொருமை உங்கள் புன்னகையினால் கிடைத்து விடும். பெண்களுக்கு மறைக்கத்தெரியாது அதனால்தான் அவர்களுக்கு உங்களை மறக்கவும் தெரியவில்லை என்ற உண்மை ஒரு நாள் அவர்களுக்கு தெரியவரும் அதுவே உங்களின் மாபெரும் வெற்றி. ஒருவர் உங்களிடம் வந்து எனக்கு கொஞ்சம் பணம் உதவி வேண்டுமென்று கேட்கிறார் மிகவும் அவசியம் மற்றும் அவசரம் என்று. நீங்களும் உதவுகிறீர்கள். ஆனால் அவர் உங்களுக்கு திருப்பி கொடுக்க வில்லையென்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக அவரிடம் நீங்கள் சண்டையோ மனவேறுபாடோ கொள்ளாதீர்கள். புன்னகைக்க கற்றுக்கொள்ளுங்கள். ஆம் நீங்கள் பணம் கொடுத்தவர் – அது உங்களின் பெருந்தன்மை. அதற்காக நீங்கள் சண்டை போடுவது – உங்களின் பெருந்தன்மையின் இழப்பு. கொடுக்க தெரிந்த உங்களுக்கு ஏன் இந்த இழப்பு. அதனால்தான் பண உதவி என்று வரும் போது எதிர் பார்ப்பு என்று ஒன்று இல்லாமல் செய்து விட வேண்டும். அதன் பிறகு அது வந்தால் வரவு இல்லையென்றால் அது தர்மத்தின் கணக்கு என்று புன்னகைத்திட வேண்டும். இந்த உலகத்தில் இழப்பு என்பது ஒன்று மட்டுமே அது தான் இறப்பு. மற்ற எல்லா வற்றையும் பகுத்தறிவு திறனால் ஈடுகட்ட முடியும். ஒரு கை இல்லையென்றால் மறு கை உதவும், ஒரு கால் இல்லையென்றால் மறு கால் உதவும், இரண்டு கால்களும் இல்லையென்றால் இரண்டு கைகள் உதவும், இரண்டு கைகள் இல்லையென்றால் இரண்டு கால்கள் உதவும், கண்கள் இல்லையென்றால் செவிகள் உதவும், செவி திறன் இல்லையென்றால் இரண்டு கண்கள் உதவும். பகுத்தறிவு திறன் இல்லையென்றால் நம்மில் உள்ள எந்த உறுப்பும் உதவாது மற்றும் அடுத்தவரும் உதவமாட்டார்கள். இதை நன்றாக உணர்ந்தவர்களை நாம் காணலாம் எந்த சூழலிலும் புரிந்தவர்கள் புன்னகைப்பார்கள் புரியாதவர்கள் தானும் குழம்பி அடுத்ததவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவார்கள். அதனால்தான் பெண்கள் எப்போதும் புரிந்தவர்களாக புன்னகைக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

பெண்கள் எளிதில் சூழ்நிலைக்கு ஏற்ப மாறக்கூடியவர்கள் மற்றும் எளிதில் வசப்படுபவர்கள். இது இரண்டுமே நல்லதொரு குணம் நல்லவற்றிற்காக பயன்படுத்தப்படும் போது. ஆனால் கெட்ட விஷயத்திற்காக பயன்படுத்தப்படும் போது இவை இரண்டும் தேவையில்லாத குணம் பெண்களுக்கு. புதிதாக திருமணமான ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு செல்கிறாள். அந்த குடும்பமோ ஒரு கூட்டுக்குடும்பம். இருந்தாலும் அவர்களுடைய சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு அவர்களின் அன்பான அரவணைப்பில் வசப்பட்டு மகிழ்ச்சியோடு வாழும் போது அதில் பொது நிறைவு உண்டு. ஆனால் அதே பெண் நான் என் வீட்டில் ஒரே பெண் சந்தோஷமாக இருந்தேன் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள் என்று தன்னுடைய சிடுசிடு முகத்தோடு அந்த சூழ்நிலையைக்கு தன்னை மாற்றிக் கொள்ளாமல் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தால் நம் பெண்மையின் தன்மையை நாமே குறைத்து கொள்வதிற்கு சமம். பெண்களிடம் எப்பொழுதும் கர்வமில்லாத இறையச்சம், அன்பு, அடக்கம், பொருமை, பொறாமையின்மை , வீரம், விவேகம், குழந்தை வளர்பின் முறை, ஒரு பெண்ணாக பிறந்ததின் முக்கியத்துவம் இவை அனைத்துடன் ஒரு புன்னகை இடம் பெற்றிருப்பின் எந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவர்களையே அறியாமல் மரியாதை கொடுக்கும் நாட்களை விரைவில் எதிர்பார்க்கலாம் புன்னகையுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 4 =