அனுபவம் 2

நாம் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அதிலும் பெண்களிடம் அதிகம் இருக்க வேண்டும். எப்பொழுதும் நம் குடும்ப விஷயங்களை முடிந்தவரை அடுத்தவருடம் பகிர்ந்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். பகிரக்கூடிய விஷயங்களை தம் குடும்பத்தாரிடம் மட்டும் பகிர்ந்துக்கொள்ள வேண்டும். அடுத்தவரிடம் பகிரும் போது குடும்ப ரகசியங்களை பாதுகாக்க முடியாது, மற்றும் தீர்வும் கிடைக்காது மேலும் நம்மை நாமே அசிங்கப்படுத்திக் கொள்வது போல் ஆகிவிடும். உடனே நீங்கள் கேட்கலாம் வீட்டில் யாரும் என்னிடம் சரியாக பேசுவதில்லை அப்படியிருக்கும் போது எவ்வாறு என் நிலையை ஜீரணிப்பது தன்னந்தனியாக என்று. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் சில சமயங்களில் சில விஷயங்களை அடுத்தவரிடம் பகிரும் போது சுவற்றில் அடித்த பந்து போல் நம்மீதே அடி விழும். அவர்கள் கூறும் ஆலோசனையை நாம் கேட்க்காவிட்டால் நம்மீது ஆத்திரமும் அடைவதோடு இல்லாமல் அடுத்தவர்களிடம் நம்மை ஏளனமாகவும் பேசுவார்கள். இதற்கெல்லாம் இடம் கொடுத்தது யார். நாம் தானே. முன்பிருந்த பிரச்சனை குறைவுதான் இப்போது நாமே ஊதி பெரிதாக்கி விட்டு என் தலை எழுத்து இது என்று மன உளைச்சலுக்கு ஆளாகி விடக்கூடாது. பொருப்பார் பூமி ஆள்வார். அதனால் இங்கு நாம் பொருமைக்கொள்ள வேண்டும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் எந்த ஒரு சிறிய அல்லது பெரிய பிரச்சனைகளையும் நம்மில் போட்டு குழப்பிக் கொள்ள கூடாது. அப்படி குழப்பினால் தலைவலி, சோர்வு, தூக்கமின்மை இதனால் கோவம் அதிகரித்து வார்த்தைகளையும் தவறாக உபயோகிக்க நேரிடும். இதனால் நம்மை சார்ந்தவர்களிடம் அசவுகரியம் ஏற்படும் இதனால் பிளவுகள், பிரிவினைகள் மற்றும் இழப்புகள் ஏற்பட கூடும். எனவே தீர்க்கமான முடிவு வேண்டுமா அமைதியாக அமர்ந்து அதுவும் விடியற்காலையில் 3 மணிக்கு மேல் கடவுளிடம் கூறுங்கள். நம்மை முழுமையாக அறிந்தவன் நம்மை ப்படைத்த இறைவன் மட்டுமே.

நமக்கு எது தேவை எது தேவையில்லை என்பதை அறிந்தவன் இறைவன் மட்டுமே. எவ்வளவு மனம் உருகி கேட்க முடியுமோ அவ்வளவும் கேட்க வேண்டும். நம்மை படைத்த இறைவனே பாதுகாவலன் மற்றும் நியாய தீர்ப்பின் அதிபதி. எனவே நமது மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நம் வீட்டை, நம் உடையை தூய்மையாக வைத்துக் கொள்ளலாம் அது எப்படி மனதை தூய்மைப்படுத்துவது என்று யோசிக்கிறீர்களா? சிம்புள் ( simple ) உங்களுடைய heart க்கு நேராக ஒரு no entry board போடுங்க. உங்களுக்கே அனுமதி கிடையாது எந்த விஷயத்தையும் heart க்கு உள்ளே கொண்டுச் செல்ல. இதை நடைமுறை படுத்திப்பாருங்ஙள். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் நாட்கள் செல்லச் செல்ல…….நிறைய அமைதிக்கிடைக்கும். பிறகு நாம் கோயிலுக்கு செல்ல வேண்டுமென்பதில்லை இறைவன் நம்மிலே இருக்கிறான் என்ற நம்பிக்கை வந்து விடும். எந்த ஒரு விஷயத்தையும் உள்வாங்கியதை அவ்வப்போது மூச்சு காற்றைப் போல் வெளியேற்றிவிட வேண்டும். மற்றும் யூகங்களை தவிர்க்க வேண்டும் அதாவது இது இப்படி நடந்திருக்குமோ அல்லது அப்படி நடந்திருக்குமோ என்று நம்முள்ளே ஏதாவது ஒரு தீர்மானத்தை கொண்டுவர முயலக்கூடாது. நேரமென்பது விலைமதிப்பில்லாத ஒன்று. அந்த நேரத்தை எவ்வித அநாவசியத்திற்காகவும் செலவிடக்கூடாது. என்னை நல்லவளா? கெட்டவளா? என்று எடைப்போட யாருக்கும் உரிமை கொடுக்கக்கூடாது.என்னை முழுமையாக அறிந்தவள் நான் மட்டுமே இறைவனுக்கு அடுத்து என்ற திடமான நம்பிக்கை இருப்பின் நாம் செய்யும் எந்த செயலும் அடுத்தவருக்கு பாதகமாக இருக்காது. இறைவனும் நமக்கு சாதகமான வழிகளை காட்டிக்கொண்டேச் செல்வான் . நம் கண்களால் கண்டு, நம் காதுகளால் கேட்டு நன்றாக தீர்மானம் செய்த பிறகு முடிவெடுப்பதே சாலச்சிறந்தது. பிறர் கண்டதை கூறக்கேட்டு யூகத்தால் முடிவெடுப்பது அதனால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது பாவச்செயலாகும். அதை தவிர்ப்பது பகுத்தறிவின் திறனாகும்.