அனுபவம் 7

சுட்டெரிக்கும் அனுபவங்கள் சுடராக தெறித்தாலும் தெறிக்கும் சுடரில் எழுச்சி கொள்ளுங்கள் என் குலப்பெண்களே

இது ஒரு அலட்சிய திருமணத்தின் அலறல் அனுபவம். ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் வயது 21. அவளின் தந்தை ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் இது 25 வருடத்திற்கு முற்பட்ட அனுபவம். அந்த பெண்ணிற்கு 4 அண்ணாக்கள் அவள் ஐந்தாவது ஆறாவது ஒரு தங்கை. தந்தையின் வருமானமோ குடும்பத்திற்கு பற்றாக்குறையாகவே இருந்தது. இருந்தாலும் தந்தையின் கடைமையினாலும் அம்மாவின் சிக்கனத்தினாலும் ஒரு வீடு மட்டும் இருந்தது. அதனால் அந்த பெண் நாம் நன்றாக படித்து அப்பா அம்மாவிற்கு ஆண் மகனைப் போல் உதவ வேண்டுமென்று படித்து முடித்து வேலைக்கும் சென்றாள். நாளடைவில் அவள் அறியாமலேயே பின் தொடர்ந்து வந்த ஆண் அவனின் அம்மாவிடம் பேசி பிறகு அந்த அம்மா அப்பெண்ணின் வீட்டிற்கு பெண் பார்க்க அனுப்பி உள்ளான். ஏழை அம்மாவோ அப்பெண்ணிடம் அந்த ஊரிலேயே நல்ல வசதியோடு வாழ்பவர்கள் மற்றும் அந்த பயனும் அரசு வேலையில் பணிபுரிபவன் அதனால் நீ திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டுமென்று கூறினார்கள் ஆனால் அப்பெண்ணோ இல்லை அம்மா எனக்கு திருமணம் வேண்டாம். வேண்டுமானால் என்னைவிட என் தங்கை மிகவும் அழகானவள் அவளுக்கு வேண்டுமென்றால் திருமணம் முடியுங்கள் என்று முடிவாக கூறினாள்.

உடனே அம்மாவும் என்னசெய்வது என்று தெரியாமல் இரண்டாவது மகளுக்கு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார் அந்த மாப்பிள்ளை வீட்டாரிடம். இரண்டு நாட்களுக்கு பிறகு அப்பெண் வேலை செய்துக் கொண்டிருந்த இடத்தில் ஒரு ஆண் ( அதே மாப்பிள்ளை )வந்தார் பிறகு ஒரு கவரை அவள் கையில் கொடுத்து விட்டு ஒன்றும் பேசாமல் சென்று விட்டார். ஒன்றும் புரியாத அவள் அந்த கவரை பிரித்தாள். அதில் ஒரு கடிதம் இருந்தது. அதில் அவர் குறிப்பிட்டுயிருந்ததாவது : நான் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு சிறிய கிராமத்தில் அரசு வேலையில் பணியாற்றி வந்தேன் அப்போது ஒரு பெண் என்னால் கர்பமாகிவிட்டதாக என் ஊரில் வந்து பஞ்சாயத்து கூட்டினார்கள். நான் எவ்வளவோ கூறினேன் இல்லையென்று. ஆனால் யாரும் என்னை நம்பவில்லை என் தாய் கூட என்னை நம்பாமல் ஒதுக்கிவிட்டாள். பிறகு கட்டப்பஞ்சாயத்தின் படி எழுபது ஆயிரம் ரூபாய் அவளுக்கு கொடுத்து அவளுக்கும் அவளுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கும் எனக்கும் எந்த வித சம்மதமும் இல்லையென்று எழுதி வாங்கிக் கொண்டு கணக்கை பஞ்சாயத்து மூலமாக சரிப்பண்ணிட்டோம். ஆனால் என் குடும்பத்தார் யாரும் என்னுடன் பேசுவதில்லை .அதனால்தான் நான் தனியாகவே இப்பெரிய வீட்டை கட்டி அதில் நான் தனியாகவே தங்கியுள்ளேன்.

நான் உன்னை தினமும் பின் தொடர்ந்து வருகிறேன் ஆனாலும் நீ என்னை சிறிதும் கண்டுக் கொள்ளாமல் செல்கிறாய் மற்றும் உன்னைப்பற்றி விசாரித்தேன். உன்னை மிகவும் எனக்கு பிடித்துள்ளது ஆனால் உன் அம்மா அப்பாவோ உன் தங்கைக்கு என்னை கேட்கிறார்கள் எனக்கு அதில் சம்மதமில்லை. நான் கூறிய அந்த பெண்ணிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை என் குடும்பத்தவர்கள் யாரும் நம்ப வில்லை ஆனால் நீங்கள் என்னை நம்பினால் எனக்கு இந்த போன் நம்பருக்கு போன் பண்ணுங்க என்று எழுதியிருந்தது. அதை படித்ததும் அவள் திடுக்கிட்டாள். நம் அம்மா அப்பாவிற்கு இந்த கதை தெரியாது போல் இருக்கு என்று எண்ணி வீட்டிற்கு பரப்பரப்போடு சென்றாள். அம்மாவை தனியாக வீட்டிற்கு வெளியே அழைத்து இக் கதையை கூறத்தொடங்கினாள். ஆனால் அம்மாவோ இதை முன்பாகவே அறிந்திருப்பதாகவும் இதை தங்கையிடம் கூறி திருமணத்தை நிறுத்த வேண்டாமென்றும் கூறினார். ஏனென்றால் வசதியான இடம் பொருப்பான பையன் என்று. உடனே அவள் கூறினாள் இல்லை அம்மா நானே அவரை திருமணம் செய்து கொள்கிறேன். ஏனென்றால் அந்த பையன் இன்று என்னிடம் வந்து இந்த கடிதத்தை கொடுத்து உன்னை தவிர யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்றார்ம்மா. ..நான் வேலையில் உள்ளேன் மறுபடியும் அந்த பெண் (கர்பமான) வந்தாலும் என்னால் சமாளிக்க முடியும் என்னிடம் வேலை உள்ளது ஆனால் தங்கையோ பாவம் என்றாள். பிறகு நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணமோ மூன்று மாதம் கழித்து இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு கவிதையுடன் ஒரு ரோசா மலர் அந்த கடிதத்தில் 90 /1, 89 /2, 88 /3, 87 /4, 86 /5 என்று இப்படி தினமும் ஒரு மலருடன் பூரித்துப் பூத்து குளிங்கினாள் அந்த பெண். திருமண நாளும் வந்தது மண்டபத்தில் அந்த பெண் தனது வலது காலை எடுத்து வைத்தவுடன் அந்த மாப்பிள்ளையோ எதிரிலே நின்று அடுத்த காலை எடுத்து வைப்பதற்குள் அவள் கையில் அந்த நாளுக்கான கடிதத்தில் 0 /90 என்று எழுதப்பட்டு ரோசாவுடன் சர்க்கரையும் அவளுக்கு கொடுத்தான். உலகையே மறந்த அவள் தன்னுடைய கடைசி உயிர் மூச்சும் இனி அவன் மடியில் தான் போக வேண்டும் என்று மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டாள். திருமணம் முடிந்தது மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக வாகனமும் வந்து நின்றது. எல்லோரும் அழுகிறார்கள் அவளைத்தவிர. உறவினர்கள் உரத்த குரலில் கூறுகிறார்கள் பாரு இந்த பொண்ணு பெரிய இடம் கிடைத்த உடன் கொஞ்சம் கூட அழாமல் செல்கிறது என்று. பிறகு சோதிட முறைப்படி மூன்று நாட்கள் கழித்துதான் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறினார்கள். அந்த மூன்று நாட்கள் மூன்று யுகங்களாக அவளுக்கு கழிந்தது ஏனென்றால் அவளின் அழுகைக்கு எல்லையே இல்லாமல் போயிற்று. ஆம் அப்போது தான் அவளுக்கு தெரிய வந்தது சில உண்மைகள். அவளுடைய கணவருக்கும் அண்ணன் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக அதை அந்த பெண்ணின் மகளே அப்பெண்ணிடம் வந்து ஆம் சித்தி என் அம்மாவிடம் அதனால் தான் நான் பேச மாட்டேன். என் அப்பாவும் அந்த சம்பவத்தை நேரில் பார்த்ததால் தூக்கு போட்டுக்க போயிட்டாங்கன்னு. அந்த பிஞ்சு மனசு கூறியபோது அவளின் ஆற்றல் எல்லாம் துளைந்து போனது. இருந்தாலும் நேருக்கு நேராக தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவரின் அண்ணியிடம் சென்று இது உண்மையா என்று வினவினாள். அதற்கவள் ஆம் இனி மேல் நான் அப்படி நடக்க மாட்டேன் அதுதான் நீ வந்துட்டியே என்றாள். அவளின் கனவுகள் சுக்கு நூறாகின.

அப்பெண்ணோ தன் பெற்றோரிடமும் கூறமுடியாது ஏனென்றால் அவர்கள் ஏழைகள் அவர்களின் மனமும் உடைந்து விடும். அதனால் தன்னுள்ளே அத்துனை பாரத்தையும் பூட்டி வைத்துக் கொண்டாள். சோதிட முறைப்படி மூன்று நாட்கள் கழிந்தது தன் கணவரை நேரில் பார்த்தவுடன் உரத்த குரலில் அழுது தீர்த்தாள் பிறகு தன் கணவனிடம் சத்தியம் வாங்கினால் இனிமேல் இந்த தவறை செய்ய கூடாது ஏனென்றால் அன்னி என்பவள் அம்மாவிற்கு சமம் மற்றும் உன் அண்ணாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேள் என்றாள் அதற்கு அவளின் கணவன் கூறினான் முடியாது என் அண்ணா என்னிடம் பேசமாட்டார். ஓகே நாளை எங்க வீட்டிற்கு போவதற்கு முன்னாள் எல்லோர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவோமில்ல அப்படியே அவர் காலிலும் விழுந்து விடுவோம் நாம் இருவரும் என்றாள். ஒரு அம்மா என்பவள் சும்மா அல்ல. தன் பிள்ளைகளின் குணம் நல்லதாக இல்லாவிட்டால் அதை அவனின் அல்லது அவளின் திருமணத்திற்கு முன்பாகவே மாற்றி விட வேண்டும். தன் மகனிடம் கெட்ட குணங்கள் உள்ளதா அது குடியாக இருந்தாலும், பெண் இச்சைக் கொண்டவனாக இருந்தாலும், புகைப் பிடிப்பவனாக இருந்தாலும், அதிகம் கோவப்படுபவனாக இருந்தாலும், பொய் கூறுபவனாக இருந்தாலும், சந்தேகப் படுபவனாக இருந்தாலும் அவர்கள் திருந்தாதவரை ஒரு பெண் வந்தால் தான் அவன் திருந்துவான் என்று எந்த ஒரு அம்மாவும் ஒரு அப்பாவி பெண்ணை பலி ஆடாக ஆக்காதீர்கள். இந்த உலகத்தில் முதல் இடம் அம்மாவிற்கு தான். அதனால் தன் மகனையோ அல்லது மகளையோ நல் வழியில் கொண்டுச் செல்வது ஒரு அம்மாவின் கடமை. ஒரு மகனை பார்த்து என் மகன் சரியில்லை என்று சொல்வதை விட இவனை வளர்த்த நான் தான் சரியில்லை என்று எண்ணி அவனை திருத்தி ஒரு மனிதனாக உருவெடுக்க செய்பவள் தான் உண்மையின் திருவுருவம் அம்மா… மகன் பாவம் மகள் பாவம் அவர்களின் மனம் உடைந்து விடும் என்று நினைப்பதை விட மனம் என்பது ஒரு கண்ணாடி அல்ல அது ஒரு தங்க தகட்டைப்போல அடிமேல் அடி அடித்து மெருகேற்றி தன் பிள்ளையை மாமனிதனாக வெளிப்படுத்துவதே ஒரு தாயின் கடமை ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + thirteen =