அனுபவம் 9

ஒரு பெண் என்பவள் மலர் போன்றவள். ஒரு மலர் என்பது பல இதழ்களைக் கொண்டது. அதேப்போலதான் பெண் என்பவளும். அவள் கொண்ட ஒவ்வொரு இதழ்க்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. ஆம் பெண்மை, அடக்கம், பொருமை , திறமை, அறிவுக்கூர்மை, தன்னம்பிக்கை மற்றும் தன்மானம் என்பவை ஆகும். அவள் வாழும் சூழலுக்கு ஏற்ப அந்த இதழ்களில் வேறுபாடுகள் ஏற்படுவதோடு சில சமயங்களில் உதிரவும் தொடங்கிவிடுகிறது. ஏனென்றால் பெண் என்பவள் மிகவும் மென்மையானவள்.

பெண்கள் மென்மையானவர்கள் என்று கூறியதால் ஆண்கள் எல்லோரும் கடினமானவர்கள் என்ற அர்த்தம் கிடையாது . பெண்களில் பெரும்பாலும் விவேகமில்லாத முடிவுகளை எடுத்து தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் அளவிற்கு மென்மையானவர்கள்.நான் வெளிநாடான சவூதியில் வேலைப்பார்த்துக்கொண்டிருப்பதால் எனக்கு ஹஜ் சமயத்தில் 15 நாட்களுக்கு ஹஜ் நடக்கும் இடத்தில் வேலை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

ஒவ்வொரு வருடமும் 15 நாட்களுக்கு அங்கேயே தங்கியிருந்து வேலை செய்வோம். சவூதி கவர்ன்மென்ட் எங்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுப்பார்கள். அங்கே நாங்கள் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த ஊழியர்களையும் சந்திப்பதோடு இல்லாமல் அவர்களோடு இணைந்து வேலை பார்ப்போம். இப்படியிருக்க ஒரு வருடம் நடந்த என் அனுபவ நிகழ்வை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன். எங்களுடைய குழுவில் ஒரு இந்திய பெண் , அந்த பெண் ஒரு ஆணைப்போல் தைரியம் மட்டுமல்ல திறமையும் உடையவள். அந்த பெண்ணிடம் ஒரு வகையான கர்வமும் கர்வமும் தென்பட்டது அதனால் நான் அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து கொண்டேன். எங்களுடைய குழுவிலுள்ளவர்கள் அணைவரும் அந்த பெண்ணிடம் நன்றாக பேசுவார்கள் என்னை தவிர. அன்று 14 நாள் அதாவது நாளைக்கு நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் இடத்திற்கு திரும்பி சென்று விடுவோம். அன்று அந்த பெண் திடீரென என்னிடம் வந்து ஏன் நீங்கள் என்னிடம் சரியாக பேசுவதில்லை என்றாள். நான் புன்னகைத்தேன் வார்த்தையின்றி. உடனே அந்த பெண் அழத்துடங்கினால் என் மனதில் பரிதாபம் அதிகமானது அந்த பெண்ணின் மீது. தேற்றினேன். ஏன் அழுகிறாய் என்றேன். உடனே என்னை ஒரு ரூமிற்கு இழுத்து சென்றாள். பிறகு அவளுடைய வயிற்று பகுதியை எனக்கு காட்டினால் அதிர்ந்து போனேன். அந்த பெண்ணின் வயிற்று பகுதியில் பழைய அறுவை சிகிச்சையின் தழும்பு. வயிற்றின் ஆரம்ப பகுதியிலிருந்து வயிற்றின் முடிவு பகுதிவரை அவ்வளவு பெரிய தழும்பு. என்னால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை ஏனென்றால் என்னுடைய கணிப்பு அந்த பெண் ஆணைப்போல் தைரியமானவள், திறமையானவள் , கர்வமுடையவள் அப்படியிருக்க இது எப்படியென்று. பிறகு மெதுவாக அந்த பெண்ணின் அழுகை குறைந்து என்னுடன் உறையாட ஆரம்பித்தாள். நான் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவள். இப்போது நானும் என் கணவரும் இங்குள்ள ஜெத்தா என்ற இடத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கிறோம். ஆனால் என் கணவர் வேலைக்கு சரியாக செல்வதில்லை மற்றும் நான் அழகாக இல்லை என்று எப்போதும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பார். அதனால் எப்போதும் நான் நைட் டூட்டியே பார்ப்பேன். இல்லை என்றால் எப்போதும் என் குழந்தைகள் அழுதுக்கொண்டே இருப்பார்கள் எங்கள் இருவரின் சண்டையை பார்த்து. அவர் வேலைக்கு சரிவர செல்லாத காரணத்தினால் இங்குள்ள செலவிற்கே என்னுடைய சம்பளம் போதவில்லை. மற்ற குடும்ப நண்பர்கள் எங்களை பார்க் அல்லது பீச் -க்கு அழைத்தால் நான் முதலில் என் குழந்தைகளிடம் அழுவேன். நான் உங்களை அவர்களுடன் அழைத்து செல்வேன் ஆனால் அவர்கள் என்ன சாப்பிட்டாலும் அங்கே எனக்கும் வேண்டுமென்று நீங்கள் கேட்கக்கூடாது என்று சொல்லிக்கொடுத்த பிறகு தான் அழைத்து செல்வேன் என்று கூறிக்கொண்டே உரத்த குரலில் அழத்துடங்கினாள். இந்த அனுபவத்தில் நான் பரிதாபப்பட்டது அந்த பெண்ணின் மீதும் அல்ல அல்லது கோவப்பட்டது அந்த ஆணின் மேலும் அல்ல. என்னுடைய கவலை முழுவதும் அந்த இரண்டு பிஞ்சு குழந்தைகளின் மீதுதான். எந்த குழந்தைக்கும் பிறப்பதற்கு முன்பே தன் தாய் எப்படிப்பட்டவள், தன் தந்தை எப்படிப்பட்டவர் என்பதை அறியாமலேயே கண்கள் இரண்டையும் மூடியப்படியே கடவுள் உயிரை கொடுத்த உடனேயே அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியில் வந்ததும் கண் விழித்துக் கதறுகிறது. அப்பேற்பட்ட விலைமதிப்பில்லா குழந்தைச் செல்வங்களை நாம் கண்ணும் கருத்துமாக பாதுகாப்பளிப்பது நமது கடமை அல்லவா? ஏனென்றால் குழந்தைகள் வளரும் சூழலை அவர்களுக்கு நன்மை பயக்க கூடிய வகையில் அமைத்து கொடுக்க வேண்டியது ஒரு தாய் தந்தையின் தலையாய மற்றும் கட்டாய கடமை அல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − one =