அனுபவம் 8

அனுபவத் தோரணையில் எட்டி எட்டி அடி வைத்தும் எட்டாத கனியாக இருப்பது கணவன் மனைவியின் உறவுதான். வாழ்கையில் இன்புற்று வாழ்வதும் இன்னலுடன் வாழ்வதும் இயற்கையின் விளையாடல் என எண்ணி நம் வாழ்கையில் ஒரு பாதி நீயானால் மறுபாதி நானாவேன் என நாட்கள் நகர்ந்தாலும் நரையே தலைமுழுதும் நிறைந்தாலும் தள்ளாடும் வயதிலும் தன்னுள்ளே தடுமாறாமல் தடமாறாமல் முதிர்ந்து அடர்ந்த மனச் சோலைவனத்தில் குடியிருக்கும் அந்த கணவன் மனைவியின் உறவிற்கு எவ்வார்த்தைப் பூட்டி புகழ்ந்திட முடியும்.

ஒரு புறம் இவ்வாறிருக்க மறுபுறம் எனக்கு அமைந்த மனைவி சரியில்லை அதனால்தான் நான் குடிக்கிறேன் சில தவறான காரியங்களை செய்கிறேன் என சிலர் கூறுகின்றனர். மனைவி சரியில்லை என்று குடித்து தன்னை அழித்துக்கொள்வதால் அவள் திருந்த வாய்ப்பு இருக்கிறதா? அப்படியே அவள் திருந்தினாலும் நீ அழிவை நோக்கி போய்விட்டாயே மறுபடியும் நிலையான நிம்மதி கிடைக்குமா? தனக்கு மட்டுமல்ல தன்னைச் சார்ந்தவர்களுக்கும் நிம்மதி கிடைக்குமா? மனிதனுக்கு மட்டுமே பகுத்தறிவை இறைவன்

கொடுத்துள்ளான். முன்பெல்லாம் படிப்பறிவும் குறைவாக இருந்தது அதனால் பகுத்தறிவை சிறிதளவே நடைமுறையில் பயன்படுத்தினோம். இப்போது பகுத்தறிவை பிரித்தறிந்து பக்குவத்தோடு பரிமாற பழகிக்கொள்ள வேண்டும். எனவே எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் மூலக்காரணத்தை கண்டறிந்து அதைக் களைய முற்படும் போது ஏற்படப்போகும் பின்விளைவிற்கும் தீர்வு கொண்டு அதை களைந்தெறிய வேண்டும் மற்றும் குழப்பம் ஏற்படாத வகையில் தீர்வுக்கான வேண்டும். ஆசையும் பொறாமையும் அக்காவும் தங்கையும் போல் இருவரும் சேர்ந்தே வருவார்கள் இருவரும் சேர்ந்தே தாங்கள் குடிக்கொண்டுள்ளவர்களை அழிப்பார்கள். பெண்களுக்கே சொந்தமானது இந்த ஆசை, பொறாமை என்ற ஆபரணங்கள். அதை முதலில் குழித்தோண்டி புதைத்திட வேண்டும். கணவனுக்கு மனைவியை பிடிக்கவில்லையா அல்லது மனைவிக்கு கணவனை பிடிக்கவில்லையா வாய்தகராறும் வேண்டாம் மனத்தகராறும் வேண்டாம். உங்கள் இரண்டு பேருக்குள் பேசி தீர்வு காணுங்கள். ஒரு பொருள் நாம் வாங்கும் போது சின்னப்பொருளோ பெரிய பொருளோ, விலைக்குறைவானதோ அல்லது விலை அதிகமானதோ அந்த உயிரற்ற பொருளுக்கு கேரண்டி கேட்டு வாங்குகிறோம். ஆனால் உயிருள்ள பொருளான கணவன் மனைவிக்கு யார் தான் கேரண்டி. ஆம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் கடவுள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற இறையச்சமுமே ஆகும்.

கணவன் மனைவிக்கு துரோகம் செய்தாலோ அல்லது ஒரு மனைவி கணவனுக்கு துரோகம் செய்தாலோ இவ்வுலகில் வேண்டுமானால் சந்தோஷமாக இருப்பது போல் தோன்றலாம் ஆனால் மறுமை என்று ஒன்றுள்ளது. மனிதர்களாக வாழும் போது ஒருவர் மற்றொருவரை தண்டிக்கும் போது தப்பித்து விடலாம் ஆனால் நம்மை படைத்த இறைவன் தண்டிக்கும் போது யாராலும் தப்பிக்க முடியாது. ஒரு குடும்பத்தின் ஆலமரம் போன்றவள் ஒரு அம்மா அதன் படர்ந்த வேர் போன்றவர் ஓர் அப்பா. அந்த வேரும் மரமும் சேர்ந்து தான் ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்க முடியும்.

திருக்குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது இறைவனின் இருக்கையே நடுங்குமாம் ஒரு கணவன் மனைவியின் பிரிவு என்றால். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தது ஒரு கணவன் மனைவியின் உறவு என்பது. அதனால் ஒரு கணவன் மனைவிக்குள் சிறிய அல்லது பெரிய தகராறுகள் இருக்கலாம் ஆனால் அது விருசலாக மாறக்கூடாது. மற்றும் அவை தன் பிள்ளைகளை பாதிக்காத அளவிற்கு இரகசியமாக பாதுகாக்க வேண்டும். இது தான் உண்மையான பாதுகாக்க வேண்டிய குடும்ப இரகசியம். என்னுடைய அனுபவத்தில் ஒரு விவாகரத்து முடிந்த ஒரு குடும்பத்தில் அந்த பெண் வீராப்புடன் உழைத்து தன் மகனையும் மகளையும் நல்ல முறையில் படிக்க வைத்து, ஒரு அரண்மனை போல் வீட்டையும் கட்டினால் கடவுளின் கருணையோடு. இருந்தாலும் அந்த குழந்தைகளின் தந்தை வீட்டிற்கு வரும்போது அந்தப் பெண் எந்த வித மறுப்பும் தெரிவிக்கவில்லை வரக்கூடாது என்று. ஏனென்றால் எனக்கும் அவருக்கும் தான் எந்த வித சம்மதமும் இல்லை ஆனால் அவர் என் பிள்ளைகளுக்கு அப்பா.அப்படியென்றால் இப்போதுக்கூட நீங்கள் சேர்ந்தே வாழலாமே பிள்ளைகளுக்காக என்றார்கள் ஒரு சிலர். அதற்கந்த பெண்ணின் குரலிலிருந்த ஆழமானது ‘எனது இருபது வயதில் இடிந்து போனவள், முப்பது வயதில் முற்றிலும் மருத்துப்போனவள், இப்ப எனது நாற்பது வயதில் நல்லதை செய்ய நினைக்கும் ஒரு சாதாரண பெண் என்றாள்.நல்ல உள்ளங்கள் இப்பெண்ணிற்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் சொர்கத்தில் அவளுக்கொரு இடம் வேண்டுமென்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + twenty =