அனுபவம் 3

இரண்டு பெண்களுக்கு மேல் ஒன்றாக அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தால் அவர்களிடம் சேர்ந்து உட்காருவதை தவிர்த்து கொள்ளுங்கள். புறம் பேசுதல் என்பது மிகவும் தவறான குணமாகும். முடிந்தவரை புறம் பேசுதலை தவிர்ப்பது ( gossip ) இறையச்சத்தில் அடங்கும். பெண்களினால் இரகசியத்தை பாதுகாக்க முடியாது. எனவே தான் பெண்கள் எப்போதும் தம்மை பிசியாகவே ( Busy) வைத்துக்கொள்ள வேண்டும். ஓய்வு கிடைக்கும் நேரத்தில் உறங்கி விட வேண்டும். எல்லோருக்கும் நம்மைப் பிடிக்கிறதா என்று சிந்திப்பதை விட நமக்கு நம்மை முதலில் பிடிக்கிறதா என்று பார்க்க வேண்டும். நம்முடைய வெளித்தோற்றத்தில் கானும் அழகு உண்மை அழகில்லை ஏனென்றால் அந்த அழகு எத்தனையோ நபரை பாதித்திருக்கும்.

ஆம் ஒரு திருமணமான ஒரு ஆண் நம்மைப் பார்த்து ஆகா எவ்வளவு அழகாக இருக்கிறது என அவன் நினைத்து பிறகு அவன் மனைவியுடன் கருத்து வேறு பாடுகளைப் பகிரும் போது அந்த பெண்ணின் மனநிலையை சிறிது நாமும் சிந்தித்து பார்க்க வேண்டும். ஏனென்றால் ஆண்கள் அழகுக்கு மயங்கக்கூடியவர்கள்.ஒரு கணவன் மனைவிக்கு தேவையானது மன நிறைவு தான் மன வேறுபாடு அல்ல. இப்போதெல்லாம் நாகரீகம் என கூறப்படும் விஷயமானது பெண் பார்க்கும் படலத்திலேயே பெண்ணையும் ஆணையும் பேசுவதற்காக தனியாக அனுப்பி வைக்கிறார்கள். நடைமுறைப்படுத்தி பாருங்கள் அந்த அரை மணி நேரம் அல்லது ஒரு மணிநேரத்தில் பிடித்ததையும் பிடிக்காததையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள முடியுமா? அதேப்போல் வேலைக்கு செல்லும் பெண்கள் தயவுக்கூர்ந்து சக ஆண் ஊழியரிடம் தன் குடும்ப விஷயங்களை பகிராதீர்கள். அதேப்போல் ஒரு சக ஆண் ஊழியர் உங்களிடம் அவருடைய மனைவியைப்பற்றி குறைக்கூறினால் அவரை ஏளனமான பார்வையில் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஆண்கள் மனதளவில் மிகவும் திடமானவர்கள் அல்லவா? அவர்களால் ஒரு மனைவியை திருத்த முடியவில்லை என்றால் பகுத்தறிவின் பயன் என்ன? ஒரு கணவன் மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் வயது முதல் குழந்தைக்கு 4,இரண்டாவது குழந்தைக்கு 2. அந்த கணவனின் மனைவியானவள் சொந்த தாய் மாமாவின் மகள். அவ்வளவு நெருங்கியச்சொந்தம். இருந்தும் என்ன பயன்? கணவன் மனைவிக்குள் சிறிய வாய்தகராறு பிறகு மனைவி அருகிலுள்ள தன் அம்மா வீட்டிற்கு சென்று விட்டு ஒரு மணிநேரத்தில் வீடு திரும்புகிறாள். வீட்டின் உள்ளே தாழிடப்பட்டுள்ளது .உரத்துக் குரலில் கத்துகிறாள் கதருகிறாள் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூட வந்து விட்டார்கள் ஆனால் தன் கணவன் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை, மெல்லியக்குரல் கூட இல்லை. கதருகிறாள் தன் கரம் பிடித்து வாழ்நாள் முழுவதும் உனக்கு துணையாக இருப்பேன் என்றவனை காண. கூடியவர்கள் கதவை உடைக்க கயவனவன், துரோகியவன் அதனால்தான் ஜான் முலக்கயிற்றில் தன்னை பலியாக்கி தூக்கில் தொங்கிய தன் கணவனைக் கண்ட 21 வயதே நிறைந்த அந்த பெண்ணின் மன நிலையை யாரால் தேற்றமுடியும் இவ்வுலக வாழ்க்கையில். ஆண்கள் சிலர் சுய நலவாதிகள். இதை மறுக்க ஆண்களே முன் வரமாட்டார்கள் ஏனென்றால் ஏற்கனவே நான் கூறினேன் ஆண்கள் திடமானவர்கள், உண்மை உரைப்பவர்கள். தன்னைத்தானே அழித்துக்கொள்ள தனக்கு எப்படி உரிமை உண்டு. நம்மைப்படைத்த இறைவனுக்கே அந்த உரிமை. மழை, பிறப்பு, இறப்பு எப்போது என்பதை தீர்மானிப்பவன் இறைவன் மட்டுமே. இந்த மூன்றில் எதுவும் நம் கையில் இல்லை. இதில் இறப்பை நம்மால் முடியும் என்று எண்ணி விஷம் குடித்து, தண்ணீரில் மூழ்கி, தூக்கிட்டு, கழுத்தை அறுத்து, ஓடும் ரயிலில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்பவர்கள் மூடர்கள். அவர்களின் இறந்த உடல் எதற்கு சமம் தெரியுமா? ஓரு நாய் இறந்து தெருவில் கிடந்தால் எவ்வாறு பார்ப்பவர்கள் அருவருப்பாக பார்ப்பார்களோ அதற்கு சமம்.

அதனால் தான் திருமறைகுரானில் இறைவன் கூறுகிறான் அவ்வாறு தன் உயிரை மாய்த்துக் கொள்பவர்கள் நிரந்தர நரகவாசிகள் என்று. ஜான் பிள் ளையானாலும் ஆண் மகன். அவன் திடமானவன். அதனால் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று முடிவெடுக்கக்கூடாது. வெட்டும் வேண்டாம் துண்டும் வேண்டாம் ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் தான் இரண்டு என்று முடிவெடுக்க வேண்டும்.இங்கே பெண்களும் சிரமமின்றி அமைதிகாப்பது மிகவும் நன்மை பயக்கும் ஆண்கள் கோவத்தில் இருக்கும் போது. ஆண்கள் எப்போதும் சுலபமாக எடுக்கும் முடிவு மூன்று. ஒன்று தற்கொலை, மதுபானத்திற்கு அடிமையாதல் அல்லது விவாகரத்து. இந்த மூன்றில் எது நடந்தாலும் இழப்பு பெண்ணிற்கு தான். அதனால் தான் எச்சூழளிலும் அமைதியே நிம்மதியையும் மன ஆறுதலையும் கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =