அனுபவம் 1

ஒரு வீட்டின் சொத்து ஒரு பெண் தான். பணம், நிலம், தங்க ஆபரணங்கள் அனைத்தும் அடுத்து தான். ஒரு வீட்டில் ஒரு அப்பா அம்மா, ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். அப்பாவோ குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கிறார்.

அதனால் அன்றாட வாழ்க்கைக்கைக்கூட சிரமமாக சென்று கொண்டிருக்கிறது. அன்றிரவு 8 மணி ஆகிவிட்டது தந்தை இன்னும் வீட்டிற்கு வரவில்லை. அம்மாவோ இங்கும் அங்கும் நடக்கிறாள். பிள்ளைகளுக்கு இன்னும் சமைத்து கொடுக்கவில்லை. அம்மா தன் மகளிடம் பசிக்கிறதாடா என்று கேட்கிறாள். அதற்கு அந்த பெண் பிள்ளை இல்லை அம்மா எனக்கு பசிக்கவில்லை என்கிறது. அடுத்து அருகிலுள்ள மகனிடம் அந்த அம்மா கேட்கிறாள் பசிக்கிறதா என்று அதற்கு அந்த ஆண் குழந்தை சொல்கிறது ஆம் அம்மா என்று. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஆண் என்பவர்கள் திடமானவர்கள், உண்மை உரைப்பவர்கள் மற்றும் தீர்க்கமான முடிவு எடுப்பவர்கள். அதனால்தான் பாருங்கள் இந்த ஆண் பிள்ளை சிறுபிள்ளையானாலும் ஆம் எனக்கு பசிக்கிறது என்று கூறியது. ஆனால் பெண் பிள்ளையோ அம்மாவும் அப்பாவும் பாவம் என்ன செய்வார்கள் என்று யோசித்து தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. தனது சிறு வயதிலேயே இந் நிலைக்கு தள்ளப்படும் இந்த பெண் பிள்ளையானது வளர்ந்தப்பிறகும் விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து அடிமைப்பெண்ணாக மாறிவிடுகிறாள். அதனால்தான் நான் கூற விரும்புகிறேன் ஒரு வீட்டில் அம்மா என்பவள் சும்மா அல்ல. அவள் முதலில் பக்குவமடைய வேண்டும். தான் எவ்வாறு வீட்டைக்கட்டி காப்பது, தன் பிள்ளைகளுக்கு தான் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டுமென்று நினைப்பது அதை நிலைப்படுத்துவது மற்றும் நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் இடையூறுகளை எவ்வாறு சமாளிப்பது என்பதை அறிந்து அவ்வப்போது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பது. ஒரு தந்தையின் கடமை பொருளீட்டுவது அதாவது குடும்பத்திற்காக உழைத்து சம்பாதிப்பது. ஆனால் ஒரு அம்மாவின் கடமை தன் பிள்ளைகளை பகுத்தறிவோடு வளர்ப்பது. இன்னும் எவ்வளவு நாட்கள் பிள்ளைகளுக்கு சோறூட்டும் போது நிலாவில் பாட்டி வடை சுடும் கதையை மட்டும் சொல்லுவது அல்லது டெலிவிஷனை ஆன் செய்து டாம் அன்டு ஜெரி கதையை மட்டும் காட்டுவது. அப்படி அல்ல பிள்ளைகளுக்கு சோரூட்டும்போது இறையச்சம், பொறாமையின்மை , நேர்மை, கோவம். அடக்கம், ஆட்சி புரிந்த தலைவர்களின் கதைகள், தியாகிகளின் கதைகள் மற்றும் அன்னை தெரசா போன்ற பொது நல உள்ளம் கொண்டவர்களின் கதைகளைக் கூறவேண்டும். இவ் வகையான கதைகளை கூறும்போது உணர்வோடு கூறவேண்டும். அப்போது நெகட்டிவ் தாட் (Negative thought )கதைகளாக இருந்தால் அதை எவ்வாறு மாற்ற முடியும் என்பதையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். அப்போது தான் அந்த குழந்தைப்பருவத்திலேயே negative thought க்கும் தீர்வு காண முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் வளரும். எனவே பெண்கள் என்பவர்கள் ஆளப்பிறந்தவர்கள் அழப்பிறந்தவர்கள் அல்ல. நீங்கள் கேட்கலாம் ஏன் இந்த பெண் பிள்ளை சிறு வயதிலேயே எவ்வளவு பெரிய மனசு அம்மா அப்பா பாவம்ன்னு நினைச்சு எனக்கு பசிக்கலம்மான்னு சொல்லிச்சுன்னு நினைக்கலாம். இதை மேலோட்டமாக பார்க்கும் போது ஆம் இது நல்ல மனசுன்னு கூறலாம். ஆனால் நன்றாக சிந்தித்து பாருங்கள் உண்மையான இறையச்சம் உள்ளவர்களுக்கு இந்த மனசு தானாகவே வரும். இந்த மனதை நாமாகவே வரவைக்கும் போதுதான் தடம் மாறி போவது. ஏனென்றால் பெண்கள் மிகவும் பலவீனமானவர்கள். அப்பா அம்மா அவர்களுக்கு உணவுக்கொடுத்தவுடன் அவர்களின் பிரச்சனை தீர்ந்து விடுகிறது ஆனால் அந்த பெண் குழந்தையின் மனதில் அந்த குணம் நாளுக்கு நாள் வளர்ந்து விடுகிறது. அதனால் தான் பாருங்கள் ஒரு ஆண் பிள்ளை திடமான மனதில் வளர்கிறது. ஆனால் பெண் பிள்ளையோ பலவீனமாக வளர்க்கப்படுகிறாள்.அதனால்தான் பெண் பிள்ளையோ ஆண் பிள்ளையோ இந்த குணம் சிறு பிள்ளையிலே அவர்களிடத்தில் கண்டால் அந்த சூழ்நிலையை மாற்றி தீர்க்கமான முடிவெடுக்கும் பிள்ளைகளாக வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

2 thoughts on “அனுபவம் 1”

  1. மிகவும் அருமை!!
    ஒவ்வொரு வீட்டிலும் இப்படித்தான் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =